;
Athirady Tamil News

சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

0
சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட வியாபாரிகளுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை  (01) சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி   எம். மதனின்  நேரடி வழிகாட்டலிலும் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்நிகழ்வில்இ பிரதேசத்திலுள்ள ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள், மளிகைக் கடை மற்றும் சில்லறை வியாபாரிகள்இ மருந்தக உரிமையாளர்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனையாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட இவ்விழிப்புணர்வு கருத்தரங்கில்இ புலனாய்வு உத்தியோகத்தர் இசட்.எம். ஸாஜீத் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு வியாபாரிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வமான வர்த்தக நடைமுறைகள் தொடர்பில் விரிவான ஆலோசனைகளையும் விளக்கங்களையும் வழங்கினார்.

இதன்போது நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம், பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்துவதன் அவசியம், நுகர்வோருக்குப் பற்றுச்சீட்டு (Bill) வழங்குதல், லேபிள் மற்றும் காலாவதி திகதி (Expiry Date) விதிமுறைகளைப் பேணுதல் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், சரியான எடை மற்றும் அளவு முறைகளைப் பின்பற்றுதல், நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிர்த்தல், உணவுப் பொருட்களின் தரம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் முறையான சேமிப்பு முறைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் நவீன காட்சிப் படங்கள் மூலம் வியாபாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டன.

நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், வியாபாரிகள் அனைவரும் நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாகப் பொறுப்புடனும் நியாயமான முறையிலும் தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் புலனாய்வு உத்தியோகத்தர்  எம்.எம். நியாஸ்  மற்றும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் (PHI) பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.