;
Athirady Tamil News

நேபாளத்தை கதிகலங்க வைத்த அனர்த்தம் ; 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட 50 கோடி தங்கம்

0

சமீபத்தில் நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நாடு பெரும் சேதத்தை சந்தித்தது. வீடுகளும், கட்டிடங்களும், கார் மற்றும் கனகர வாகனங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டன.

500க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்ட நிலையில், 1500க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

ஆவணங்கள் மீட்பு
இந்நிலையில்தான் வெள்ளத்தில் சிக்கிய ஒரு வங்கியின் லாக்கரை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.

நேபாளத்தில் நுவா கோட் மாவட்டத்திலுள்ள திரிசூலி துங்கே பகுதியில் உள்ள ஒரு வங்கி வெள்ளம் அதிகளவு சென்றதால் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது.

தற்போது வெள்ளம் சற்று தணிந்த நிலையில் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வங்கியில் இருந்த லாக்கரை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.

அந்த லாக்கரில் பாதுகாப்பாக இருந்த 50 கோடி நேபாள ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் சேர் படிந்த நிலையில் இருந்த 1.5 கோடி பணம், வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் மீட்கப்பட்டிருக்கிறது.

தற்போது அந்த லாக்கரில் இருந்த அனைத்தையும் பத்திரமாக வேறொரு பாதுகாப்பான் இடத்திற்கு வங்கி அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.