;
Athirady Tamil News

அமெரிக்காவில் திருமணம்: ஆன்லைனில் மணமக்களை ஆசீர்வதித்த பெற்றோர்

0

ஐதராபாத்,

பிள்ளைகளின் திருமணத்தை நேரில் பார்க்க முடியாததால் பெற்றோர் ஆன்லைனில் பார்த்து மணமக்களை ஆசீர்வதித்தனர்.

அமெரிக்காவில் பணி

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள வேப்பல சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ்-ஜோதி தம்பதியினர். இவர்களது மகள் அமெரிக்காவில் எம்.எஸ். படித்துவிட்டு, அங்கேயே ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதேபோல், ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டத்தைச் சேர்ந்த மஸ்தான் ராவ்-ரமா தம்பதியினரின் மகன் ரோகித் என்பவரும் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.

திருமணம் நிச்சயம்

இந்த நிலையில், இருவருக்கும் இடையே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களது திருமணத்தை சொந்த ஊரில் நடத்த இருவீட்டு பெற்றோர்களும் திட்டமிட்டிருந்தனர். ஆனால், விசா பிரச்சினையில் அவர்கள் இந்தியா வர முடியாத சூழ்நிலை உருவானது.

ஆன்லைனில் ஆசீர்வாதம்

இதனால் அமெரிக்காவிலேயே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தங்களது பிள்ளைகளின் திருமணத்தை நேரில் பார்க்க முடியவில்லையே என்று பெற்றோர் கவலையடைந்தனர். இதையடுத்து, திருமண விழா முழுவதும் ஆன்லைனில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தியாவில் இருந்தபடி தங்களது பிள்ளைகளின் திருமணத்தை ஆன்லைன் திரையில் பார்த்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், ஆனந்தக் கண்ணீருடன் மணமக்களுக்கு அட்சதை தூவி ஆசி வழங்கினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.