;
Athirady Tamil News

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்

0

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளை தேடி” எனும் தொனிப் பொருளுடன் சர்வதேச நீதியை வலியுறுத்தி இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் போராட்டத்தில் லண்டனில் வாழும் ஈழத் தமிழர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும், குற்றவாளிகள் பொறுப்புக் கூற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.