உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்
;
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் ஆ. ந. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நினைவஞ்சலி நிகழ்வில், தமிழரசுக்கட்சியின் மூத்த செயற்பாட்டாளர் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியன் மற்றும் லண்டனைச் சேர்ந்த வைத்தியர் அமிர்தலிங்கம் பகீரதன் ஆகியோர் சிறப்பு நினைவுப் பேருரைகளை ஆற்றினர்.
நிகழ்வில் அமரர் வி. தர்மலிங்கத்தின் புதல்வர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராஜா, அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அமரர் வி. தர்மலிங்கத்தின் சேவைகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.