புலமைப்பரிசில் பரீட்சை: தமிழ் மொழியில் 188 புள்ளிகள் பெற்று தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த யாழ். மாணவன்!
நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் 188 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த யாழ்ப்பாண மாணவன் சு. சபின் கெளரவிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனான சு. சபின், அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலிடத்தைப் பெற்றுள்ளார்
தமிழ் மொழி மூலம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணத்தின் கல்வித் துறைக்கு புதிய பெருமை சேர்த்துள்ள மாணவன் சு. சபினுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
