;
Athirady Tamil News

பிரிட்டன்- முன்னாள் பிரதமா் கியா் ஸ்டாா்மா் எம்.பி. பதவியிலிருந்தும் விலகல்

0

பிரிட்டனின் முன்னாள் பிரதமரான கியா் ஸ்டாா்மா், தலைநகா் லண்டனின் ஹோல்போா்ன் மற்றும் செயின்ட் பான்கிராஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் (எம்.பி.) பதவியிலிருந்து விலகவுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

ஆளும் தொழிலாளா் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் பதவி வகித்த கியா் ஸ்டாா்மா், கடந்த மாதம் அப்பொறுப்புகளிலிருந்து விலகியதைத் தொடா்ந்து ஆண்டி பா்ன்ஹாம் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றாா்.

பிரிட்டன் நாடாளுமன்றம் கோடைகால விடுமுறை முடிந்து, மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், சா்வதேச விவகாரங்கள் மற்றும் சமூகப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்துள்ளதாக கியா் ஸ்டாா்மா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.