;
Athirady Tamil News

மகளின் படிப்பு செலவுக்காக வெறுங்காலுடன் மாரத்தானில் ஓடிய தாய்: முதலிடம் பிடித்து அசத்தல்

0

மும்பை,

மகளின் கல்விக்காக…

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகை பகுதியை சேர்ந்தவர் ரமா பாய்(வயது47). இளம் வயதில் கணவரை இழந்த இவர், வீடு களில் சமையல் வேலை செய்து தனி ஆளாக 2 பெண் பிள் ளைகளை வளர்த்து வருகிறார். இதில் ஒருவர் போலீஸ் வேலைக்கு தயாராகி வருகிறார். மற்றொரு மகள் பி.எஸ்.சி. படித்து வருகிறார். இந்தநிலையில் மகளின் படிப்பு செலவுக்கு பணம் தேவைப்பட்டது. பல வழிகளில் முயன்றும் ரமாபாயால் பணம் திரட்ட முடியவில்லை.

அப்போது தான் வீட்டருகில் உள்ள கல்வி நிறுவனத்தில் மாரத்தான் போட்டி நடப்பதும், அதில் வெற்றி பெற்றால் பணப்பரிசு கிடைக்கும் என்பதும் ரமாபாயிக்கு தெரியவந்தது. எனவே அவர் மகளின் கல்விக்காக போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்தார்.

மகளுக்காக ஓடிய தாய்

போட்டி நடக்கும் நாளும் வந்தது. மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காக தடகள வீரர்களும், இளைஞர்களும் விளையாட்டு சீருடைகள் மற்றும் ‘ஷூக்களை அணிந்து கொண்டு தயாராக நின்றனர். அப்போது, போட்டி நடக்கும் இடத்திற்கு தனது வழக்கமான நைந்த சேலையை அணிந்து கொண்டு ரமாபாய் நடந்து சென்றார். அவர் தனது பிள்ளை களை விட வந்து இருப்பார் என அனைவரும் நினைத்தனர். ஆனால் அவர் போட்டியாளர்களுடன் களத்தில் நின்றார்.

அப்போது தான், அவர் பிள்ளையை விட வரவில்லை, பிள்ளை யின் கல்வி செலவுக்காக போட்டியில் கலந்து கொள்ள வந்து இருக்கிறார் என்பது தெரியவந்தது. போட்டி தொடங்கியவுடன் அனைவரும் வேகமாக ஓடினர். ஆனால் ரமாபாய் நிதானமாக இலக்கை நோக்கி முன்னேறி னார். பாதி வழியில் அவர் காலில் அணிந்து இருந்த ரப்பர் செருப்பு அறுந்தது. எனினும் போட்டியில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற அவரது வேட்கை தணிய வில்லை.

முதலிடம் பிடித்தார்

செருப்புகளை, வெற்றி கோப்பை போல கையில் பிடித்தபடி வேகமாக ஓடினார். சேலை அணிந்து, செருப்பு கூட அணியா மல் பெண் கரடுமுரடான சாலையில் தனது பிள்ளைக்காக ஓடியது அங்கு இருந்தவர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்ப டுத்தியது. பந்தய இலக்கை கடந்து ரமாபாய் முதலிடம் பிடித்து அசத்தினார். அவருக்கு சான்றிதழ், ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

அவர் பரிசு பெற்றபோது சுற்றி யிருந்த அனைவரும் அவருக்காக உற்சாக குரல் எழுப்பினர். ஆனால் அவர் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி. ‘தினமும் குடும்பத்துக்காக ஓடும் எங்களுக்கு. இந்த மாரத்தான் ஓட்டம் ஒன்றும் பெரியதல்ல’ என்று கூறுவது போல சிறிய புன்னகை யுடன் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார். மகளின் கல்விக்காக வெறும் காலுடன் பெண் மாரத்தானில் ஓடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அதில் நெகிழ்ச்சியுடன் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.