;
Athirady Tamil News

வவுனியாவில் சாளம்பைக்குளத்தில் விபத்து: ஒருவர் பலி

0

வவுனியாவில் சாளம்பைக்குளத்தில் விபத்து: ஒருவர் பலி

வவுனியா, சாளம்பைக்குளம் பல்கலைக் கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (02.09) இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனிய, சாளம்பைக்குளம் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக வீதியோரத்தில் அமர்ந்து சோளம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரிடம், பிறிதொருவர் சோளம் வாங்கிக் கொண்டிருந்த போது, மன்னாரில் இருந்து வந்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு வவுனியா பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும், சோளம் வாங்கிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் சாளம்பைக்குளம் பகுதியை சேர்ந்த ரகீம் மஜீத் ( வயது 31) என்பவரே பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.