;
Athirady Tamil News

தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!

0

தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!

தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய செயற்ப்பாட்டாளர்களின் ஏற்ப்பாட்டில் வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபியில் இன்று (15.09) அனுஸ்டிக்கபட்டது.

இதன்போது தியாகி திலீபனின் நினைவு படத்திற்கு மலர் மாலை அணிவித்து, ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்தப்பட்டது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன், மாநகர சபை உறுப்பினர் தர்மா மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.