;
Athirady Tamil News

போராட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

0
யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் 2ஆம் திகதி வெளிவரவுள்ள போராட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. 
போராட்ட திரைபபடமானது , உதைப்பந்தாட்ட வீரரனொருவனின் கதையாக ஈழத்தை களமாக கொண்டு பல சவால்களுக்கு மத்தியில் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
கதாநாயகனாக றீகன் அறிமுகமாகியுள்ளதுடன் , கதாநாயகியாக  நிவேதிகா ராசையா ,நடித்துள்ளதுடன், ஈழ சினிமாவின் பிரபல நடிகர் நடிகைகளும் நடித்துள்ள இந்த படத்திற்கு பூவன் மதீசன் இசை அமைத்துள்ளதுடன் , ஒளிப்பதிவாளராக ஏ.கே கமலும் , பணியாற்றியுள்ளனர்.
படத்தில் பாடல்களை வாகீசன் ராசையா , உமாகரன் ராசையா , பொத்துவில் அஸ்மீன் , பூவன் மதீசன் , கே.எஸ் சாந்தகுமார் மற்றும் அருண் யோகதாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
பாடல்களை தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரும் , பாடகருமான தேனிசை தென்றல் தேவா, பாடகர் சத்யன் , பாடகி கோவை கமலா ஆகியோருடன் , ஈழத்தின் பிரபல பாடகரான வாகீசன் இராசையா,  கோகுலன் சாந்தன், தேவன் அய்யா , பூவன் மதீசன் , டயஸ் மற்றும் அக்சலா ஆகியோர் பாடியுள்ளனர்.
இசை வெளியீட்டு நிகழ்வில் , தென்னிந்தியாவின் பிரபல யூடியூப்பரான மைக் செட் சிறீராம் , பிரபல பாடகர் சத்யன் ஆகியோருடன் , திரைப்பட குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.