;
Athirady Tamil News

அணையா விளக்கு போராட்டம் இன்றுடன் நிறைவு

0
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்து சென்றமையை கண்டித்தும், சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் எனவும் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
 
தியாக தீபத்தின் நினைவாலயம் முன்பாக நேற்று முன்தினம்  புதன்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் , இன்று வெள்ளிக்கிழமை இறுதிநாள் போராட்டம் மக்கள் எழுச்சி போராட்டமாக இடம்பெறவுள்ளது.
 
மாலை 4.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
 
தியாக தீபத்தின் சிலை மீள நிறுவுப்படாத பட்சத்தில் வடக்கு கிழக்கெங்கும் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டதை முன்னெக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்

தியாக தீபத்தின் நினைவாலயத்தில் இருந்த தியாக தீபத்தின் சிலையை கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20க்கும் மேற்பட்ட பொலிஸார் , இரண்டு பொலிஸ் வாகனங்களில் வந்து சிலையை அங்கிருந்து பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர்.

பொலிஸாரினால் சிலை பெயர்த்து எடுத்து செல்லபப்ட்டதனை கண்டித்தும் , மீள அந்த சிலையை அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை குறித்த சிலையை மீள அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என சிலை எடுத்து செல்லப்பட்ட தினமான ஞாயிற்றுக்கிழமை தியாகி திலீபனின் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டிலும், மறுநாள் திங்கட்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலும்,  மூன்றாவது நாளாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பொது அமைப்புக்களின் ஏற்பாட்டிலும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இந்நிலையில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம்  புதன்கிழமை நினைவாலயம் முன்பாக விளக்கு ஏற்பட்டு, நாளைய வரையில் விளக்கினை அணைக்காது இரவு பகலாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.