;
Athirady Tamil News

சிறுவர் தினத்தில் மாணவியின் கல்வி ஊக்குவிப்பிற்குப் பாராட்டு

0

கடந்த 2025 ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரக் (G.C.E. O/L) பரீட்சையில் நற்பிட்டிமுனை அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் அதிக பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவி அலியார் பாத்திமா அப்தா (Aliyar Fathima Aftha) பணப்பரிசு வழங்கி விசேடமாகக் கௌரவிக்கப்பட்டார்.

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாக, தொடர்ச்சியாக 5 ஆவது தடவையாக இக் கல்வி ஊக்குவிப்பு உதவித்தொகை மாணவிக்கு வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச சிறுவர் தினமான இன்றைய நன்னாளையும், சமூக ஆர்வலரின் மனைவியின் பிறந்தநாளையும் சிறப்பிக்கும் வகையில் இக் கௌரவிப்பு நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது.

இதன்போது சாதனை படைத்த மாணவி அலியார் பாத்திமா அப்தா அவர்களுக்குப் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர் மற்றும் சமூக ஆர்வலரின் மனைவி ஆகியோர் இணைந்து ரூபா 15,000.00 பணப் பெறுமதியான காசோலையினை உத்தியோகபூர்வமாகக் கைளித்துத் தமது வாழ்த்துக்களையும் கௌரவத்தையும் தெரிவித்தனர்.

கிராமப்புற மாணவர்களின் கல்வி உயர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தொடர்ச்சியாக வழங்கி வரப்படும் இக் கல்வி உதவித் திட்டத்திற்குப் பாடசாலை சமூகமும் பெற்றோர்களும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.