தமிழர் பகுதியில் மின்னல் தாக்கி 20 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
வவுனியா – செக்கடிப்பிலவு பகுதியில் மின்னல் தாக்கியதில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.
செக்கடிப்பிலவு பகுதியைச் சேர்ந்த ஜோசப் அன்ரனி என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை வவுனியாவின் பல பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
இதன்போது, குறித்த இளைஞர் அப்பகுதியிலுள்ள மைதானத்தில் இருந்ததாகவும், மழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அருகிலிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்தச் சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.