;
Athirady Tamil News

கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி இளைஞர்.., மறுநாளே அரசு வேலை வழங்கிய முதல்வர்

0

கோரிக்கை வைத்த மறுநாளே மாற்றுத்திறனாளி இளைஞருக்கு அரசு வேலை வழங்கி முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணையை வழங்கினார்.

அரசு வேலை வழங்கிய முதல்வர்
சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

முன்னதாக, விழாவில் பங்கேற்ற அவர், புதிய திறன் பயிற்சி ஆய்வகங்களைத் திறந்து வைத்தார்.

மேலும், தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்களை அமைப்பதற்காக Schneider நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த விழாவில், மாற்றுத்திறனாளி மாணவர் தினேஷ், தனக்கு அரசு வேலை வழங்குமாறு முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை மனு அளித்தார்.

இதையடுத்து, அடுத்த நாளே தினேஷுக்கு அரசு வேலை வழங்கி முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணையை வழங்கினார்.

அவருக்கு திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.