;
Athirady Tamil News

வாழ்நாளில் 48 ஆண்டுகளாக தண்ணீரே குடிக்காத கோடீசுவரர்; ஆச்சரிய தகவல்

0

நியூயார்க்

கோடீசுவரர் வாரன் தன்னுடைய வாழ்நாளில் 48 ஆண்டுகளாக தண்ணீரே குடிக்கவில்லை என்று கூறி ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

ஆச்சரிய தகவல்

அமெரிக்காவின் முன்னணி முதலீட்டாளர் மற்றும் பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரரான பெரும் தொழிலதிபராக அறியப்படுபவர் வாரன் பப்பே (வயது 96). இந்நிலையில், மற்றொரு பணக்காரரான பில் ஆக்மேன் என்பவர் வாரனை பற்றிய ஆச்சரியமளிக்கும் தகவல் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

பெரும் கோடீசுவரரான ஆக்மேன், இரவு விருந்து ஒன்றில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது, வாரனிடம் குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார். ஆனால், அதனை வாங்க வாரன் மறுத்து விட்டார். அவரிடம் ஆக்மேன், நீங்கள் தண்ணீரே குடித்ததில்லையா? என கேட்டார்.

5 கேன்கள்

அதற்கு வாரன், நான் 48 ஆண்டுகளில் ஒரு முறை கூட தண்ணீரே குடித்தது இல்லை என கூறி ஆச்சரியப்படுத்தினார். தனக்கு அதனை விட சோடாவே அதிகம் பிடிக்கும் என கூறியுள்ளார். இதற்காகவே ஆக்மேனை பார்க்க வாரன் வரும்போது, ஒவ்வொரு முறையும் செர்ரி கோக்கை ஆக்மேன் வாங்கி வைத்திருக்கிறார்.

இதன்படி, ஒரு நாளைக்கு 5 கேன்கள் கொண்ட கோக்கை அவர் குடித்து வருகிறார். முதலில் பல ஆண்டுகளாக பெப்சி குடித்து வந்த வாரன், பின்னர், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கூறியதன் பேரில் கோக்கிற்கு மாறியுள்ளார்.

இதுபற்றி போர்ச்சூன் நாளிதழுக்கு முன்பு ஒருமுறை, வாரன் அளித்த பேட்டியில், ஒரு நாளைக்கு 2,700 கலோரி உணவாக எடுத்து கொள்கிறேன் என்றால், அதில், கால் பங்கு கோக் இருக்கும் என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.