;
Athirady Tamil News

பூட்டிய வீட்டிற்குள் சடலமாக கிடந்த குடும்பம் ; இந்தியாவை உலுக்கிய சம்பவம்; இதற்காக இப்படி?

0

கேரளம் மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியை சேர்ந்தவர் தாய்,தந்தை மற்றும் மகன் இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

மளிகை கடை ஒன்றை நடத்தி வந்த தந்தை அதில் நஷ்டமானதால் கடையை மூடி விட்டார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை ன் வீடு பூட்டி கிடப்பதை கண்ட உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பிரேத பரிசோதனை
இதையடுத்து அவருக்கு போன் செய்து பார்த்தனர். ஆனால் பதில் இல்லாததால் அவர்கள் சுங்கனாச்சேரி பொலிஸிக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார் உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது 3 பேரும் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்களின் உடல்களை பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடன் தொல்லை காரணமாக 3 பேரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.