;
Athirady Tamil News

நேபாளம்: கடும் பனிப்பொழிவில் சிக்கிய 6 இந்திய சுற்றுலா பயணிகள் – மீட்பு பணிகள் தீவிரம்

0

காத்மாண்டு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில், நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்ற 6 இந்திய சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஷே-போக்சுண்டோ தேசிய பூங்காவில் பனிப்பொழிவுக்கு நடுவே சிக்கிக் கொண்டனர்.

கடும் பனிப்பொழிவு
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 300 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்காவில், நேபாள நாட்டின் மிக ஆழமான ஏரியான ஷே-போக்சுண்டோ ஏரி அமைந்துள்ளது. அந்த பகுதி முழுவதும் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல வேண்டும் என்று தேசிய பூங்காவின் காவலர்கள் எச்சரித்ததாகவும், அதனை மீறி இந்திய சுற்றுலா பயணிகள் அங்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

தேடும் பணி
இந்நிலையில், பனிப்பொழிவு அதிகரித்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற முடியாமல் மாட்டிக் கொண்டனர். இதனிடையே, சுற்றுலா பயணிகள் திரும்பி வராததால் அவர்களின் சுற்றுலா வழிகாட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்திய சுற்றுலா பயணிகளை தேடும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது.

ஆனால் பனிப்பொழிவு அதிகரித்த காரணத்தால் சுற்றுலா பயணிகளை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் அவர்களின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணியை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நேபாள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.