;
Athirady Tamil News

நலின் பண்டார MP இன் 39 ட்ரோன்கள், மைக்ரோபோன்கள் பறிமுதல்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டாரவினால் இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 39 ட்ரோன் (Drone) இயந்திரங்களும், 16 மைக்ரோபோன்களும் (Microphones)பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ட்ரோன்கள், மைக்ரோபோன்கள் , கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (08) காலை கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சுங்க ஊடகப் பேச்சாளர் சந்திரன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

குறித்த ட்ரோன் இயந்திரங்கள், இறக்குமதி அனுமதிப்பத்திரம், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முறையான அனுமதிகள் ஏதுமின்றி நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார, ஞாயிற்றுக்கிழமை (08) காலை 11:23 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான யு.எல்.-307 (UL-307) இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.