;
Athirady Tamil News

1.9 மில்லியனை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

0

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.9 மில்லியனை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் (SLTDA) வெளியிடப்பட்டுள்ள அண்மைய தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 1,912,233 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மேலும் நவம்பர் 01 முதல் நவம்பர் 08 வரை 49,929 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளதுடன், மொத்தம் 512,026 இந்தியப் பிரஜைகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து 176,670 பேரும், சீனாவிலிருந்து 126,326 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 108,754 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

நவம்பர் மாதத்தின் முதல் 08 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை இந்தியா பதிவு செய்துள்ளதுடன், அக்காலப்பகுதியில் 12,401 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.