ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தில் வெள்ளம்
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக ஹட்டன் பகுதியில் நேற்று பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக, ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் ஒரு பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
இதனால், மேற்படி அலுவலகத்தின் கணக்குப் பிரிவில் இருந்த பல மின்சாதனங்களும், பல்வேறு முக்கிய ஆவணக் கோப்புகளும் சேதமடைந்துள்ளன என அந்த அலுவலக ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.