;
Athirady Tamil News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பேராசியர், பேராசிரியர் பதவி உயர்வுகளுக்குப் பேரவை அங்கீகாரம்!

0
யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று  நவம்பர் 28 ஆம் திகதி சனிக்கிழமை துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜே.பி. ஜெயதேவன் மற்றும்  பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் மனிதவள முகாமைத்துவத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான

கலாநிதி ஆறுமுகம் சரவணபவன் ஆகியோரின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் அடிப்படையில்,  விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜே.பி. ஜெயதேவன், இரசாயனவியலில் சிரேஷ்ட பேராசிரியராகவும், முகாமைத்துவ கற்கைகள் மற்றும்  வணிக பீடத்தின் மனிதவள முகாமைத்துவத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஆறுமுகம் சரவணபவன், மனிதவள முகாமைத்துவத்தில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.