;
Athirady Tamil News

ஜப்பானில் மிதவை ரெயில்: 603 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை

0

ஜப்பான்,

ஜப்பான் நாட்டின் ரெயில்வே நடத்திய சோதனையில் ‘எஸ்சிமெக்லவ்’ என்ற மின்காந்த மிதவை ரெயிலானது, மணிக்கு 603 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்தது.

எஸ்சிமெக்லவ்- மின்காந்த மிதவை ரெயில்

ஜப்பான் நாட்டின் கண்டுபிடிப்பான ‘எஸ்சிமெக்லவ்’ என்ற மின்காந்த மிதவை ரெயிலானது தண்டவாளத்தில் இருந்து 10 செ.மீ. உயரத்தில் மிதந்து செல்லும். இது உலகின் அதிநவீன போக்குவரத்து தொழில்நுட்பங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மணிக்கு 603 கி.மீ. வேகம்- உலக சாதனை

நாம் பார்க்கும் மின்சார ரெயில்கள், உயரே உள்ள மின்கம்பி வடத்தில் இருந்து மின்சாரத்தை பெற்று தண்டவாளத்தில் இயங்குகின்றன. ஆனால் ஜப்பான் நாட்டின் ரெயில்வே நடத்திய சோதனையில் ‘எஸ்சிமெக்லவ்’ ரெயில் மணிக்கு 603 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்தது.

10 செ.மீ. உயரத்தில் மிதக்கும் ரெயில்

இந்த ரெயில் தொழில்நுட்பத்தில் சூப்பர் கண்டக்டிங் என்ற மீள்கடத்தும் காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மிகக்குறைந்த வெப்பநிலையில் செயல்படும் இந்த காந்தங்கள், வலிமையான காந்த புலத்தை உருவாக்குகின்றன. பாதையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மின் காந்த சுருள்களுடன் இவை தொடர்புகொண்டு ரெயிலை சுமார் 10 செ.மீ. உயரத்தில் மிதக்க செய்கின்றன.

நவீன அறிவியல் தொழில்நுட்பம்

இதன் இயக்கத்திற்கு நேரியல் மின்மோட்டார் பயன்படுத்தப்படுகிறது. பாதையில் உள்ள மின்சார சுருள்கள் உருவாக்கும் நகரும் காந்தப்புலம் மூலம் ரெயிலை முன்னோக்கி உந்தி அதிவேகமாக தள்ளுகிறது. இந்த ரெயில் புறப்பட்டு விரைவாக வேகத்தை எட்ட தண்டவாளங்களில் ரப்பர் சக்கரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வேகத்தை எட்டியதும் சக்கரங்கள் மேலே மடங்கி, காந்த மிதவை மூலம் பயணத்தை தொடங்குகிறது. நவீன அறிவியலின் மின்காந்தவியல், மீள்கடத்தும் இயற்பியல், மின்னணுவியல் ஆகிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, மிதக்கும் ரெயிலை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள், என்ஜினீயர்கள் உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.