2024 O/L பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை நேர அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என அறிவிப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது குறித்த…
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
குறைந்த வருமானம் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு…
கேரள மீனவர்களை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று(மார்ச் 19) திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மீன்பிடிக்கச் சென்று வரும்…
சட்டப்படி பணி இயக்கத்தை தொடரவுள்ள சுங்கத்துறை ஊழியர்கள்
சுங்கத்துறை ஊழியர்கள், அதிகாரிகளுடனான கலந்துரையாடல் தோல்வியடைந்தமையை அடுத்து தங்களின் சட்டப்படி பணி இயக்கத்தை தொடர முடிவு செய்துள்ளனர்.
ஆரம்பத்தில், சுங்கத்துறை அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் அதிகாரிகள் கூடுதல்…
இலங்கை பொருளாதார நிலையில் ஒரு மாற்றம் : அரசாங்கத்தின் தகவல்
நாங்கள் இன்னும் கடினமான இடத்தில் இருக்கின்றோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பொருளாதார மாற்றம்
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இப்போது ஒரு…
ஜேர்மன் பள்ளிகள் பிள்ளைகளை போருக்குத் தயாராக்கவேண்டும்: அமைச்சரின் ஆலோசனை
ஜேர்மன் பள்ளிகள், மாணவர்களை, போர், பெருந்தொற்று, இயற்கைப் பேரழிவுகள் போன்ற நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ள தயாராக்கவேண்டும் என ஜேர்மன் கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை கூறியுள்ளார்.
பள்ளிகள் பிள்ளைகளை போருக்குத் தயாராக்கவேண்டும்
உக்ரைன்…
மின் கம்ப இணைப்பில் திடீரென ஏற்பட்ட தீ : அதிர்ச்சியில் ஒருவர் உயிரிழப்பு
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் தோட்ட மேல் பிரிவில் மின் கம்ப இணைப்பில் திடீரென தீப்பிடித்து எரிவதைப் பார்த்த ஒருவர் அதிர்ச்சிக்கு உள்ளாகி தரையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(19.03.2024) மாலை…
சாணக்கியன் பதவி விலகல் – கோப் குழுவிலிருந்து வெளியேறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே ஆகியோரும் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் (கோப்) இருந்து பதவி விலகல் செய்துள்ளனர்.
முதலாம்…
கனடாவில் தந்தையின் அறையில் மகள் கண்ட அதிர்ச்சியை ஏற்படுத்திய பொருள்
மரணமடைந்த தன் தந்தையின் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த ஒரு கனேடிய பெண், தன் தந்தையின் அறையில் இருந்த ஒரு பொருளைக் கண்டு அதிர்ந்துபோய், உடனே பொலிசாரை அழைத்தார்.
கியூபெக்கிலுள்ள தன் தந்தையின் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தார் Kedrin…
கட்டுநாயக்கவில் சுமார் 10 கோடி பெறுமதியான நகைகளுடன் இருவர் கைது
10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான நகைகளை டுபாயிலிருந்து கொண்டு வந்த இரு பயணிகளை இலங்கை சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(19) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.…
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வடகொரியா!
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது.
வடகொரியா, நேற்று காலை 7.44 மணிக்கு இரண்டு ஏவுகணைகளை ஒரே…
காசா அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்
காசாவின் அல்ஸிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குதலொன்றை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைக்குள் டாங்கி மற்றும் துப்பாக்கி பிரயோக சத்தங்கள் கேட்பதக தெரிவிக்கபப்டும் நிலையில், தாங்கள் மிகவும் துல்லியமான…
கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய ஐவர் கைது!
அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஐந்து கனரக வாகனங்களும் அதன் சாரதிகளும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி -தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்லாறு, தருமபுரம், புளியம்பொக்கணை ஆகிய…
சிறப்பாக இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வு
சிறப்பாக இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வு - 19.03.2024
யாழ் இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் இலங்கை…
தமிழகத்துக்கும் இந்த பரிதாப நிலை ஏற்படுமா? அச்சத்தில் மக்கள்!
சென்னை: பெங்களூரு மாநகரமே தண்ணீர் பஞ்சம் பற்றி பஞ்சப்பாட்டு பாடிவரும் நிலையில், அந்த பரிதாப நிலை தமிழகத்துக்கும் ஏற்படுமோ என்ற அச்சத்தில் கலங்கியிருக்கிறார்கள் மக்கள்.
கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழகம் வரலாறு காணாத மழையை…
தமிழ் கடற்தொழிலாளர்களை கடலில் மோத வைக்க டக்ளஸ் முயற்சி – சுரேஷ் குற்றச்சாட்டு
தமிழக தமிழ் கடற்தொழிலாளர்களையும் , வடக்கு தமிழ் கடற்தொழிலாளர்களையும் கடலில் மோத வைக்கவே குடியியல் தன்னார்வ படையணி என்பதனை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உருவாக்க நினைக்கிறார் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக…
மேடையில் கண்கலங்கிய பிரதமர் மோடி!
சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ள பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
சேலத்தில் நடைபெற்றுவரும் பொதுக்கூட்ட மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் போட்டியிடும் பாட்டாளி மக்கள்…
நண்பியை திருமணம் செய்தார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்!
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தனது நீண்டகாலதோழியை திருமணம் செய்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் பெனிவொங். சோபி அல்லோச்சசுடன் திருமணபந்தத்தில் இணைந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்த ஒருபால் இனத்தவர்கள் திருமணம் உலகின் கவனத்தை…
யாழில் போராட்டம்
தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்ட செயற்பாட்டினை கண்டித்து இன்றைய தினம்…
வடக்கில் கடந்தாண்டு மாத்திரம் ரூ.18 கோடி காசோலை மோசடி
வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு காசோலை மோசடி தொடர்பாக 79 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முறைப்பாடுகளின் அடிப்படையில் 34 பேர் சந்தேகத்தில் கைதாகியுள்ளனர். மொத்தமாக 18 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகளில்…
யாழுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி – பலாலியில் 278 ஏக்கர் காணிகளை கையளிக்க…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278 ஏக்கர் விவசாய காணிகளை…
வடக்கில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . குறிப்பாக எதிர்வரும் ஏப்ரல், மே, ஜுன், மற்றும் ஜூலை மாதங்களில் வெப்பநிலை தற்போது உள்ளதை விடவும் உயர்வாக இருக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக…
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 8 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோஸ்ட் மற்றும் பக்திக்கா மாகாணங்களில் நேற்று (18) அதிகாலை 3.00 மணியளவில் இத்தாக்குதல்கள்…
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற்…
‘கோவையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தினேன்’: மோடியின் முழு உரை
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கோவையில் நேற்று வாகனப் பேரணியில் ஈடுபட்ட மோடி,…
மாலைதீவின் பாதுகாப்பில் பிற நாடுகள் தலையிட தேவையில்லை: முகமது முய்சு காட்டம்
மாலைதீவின் எல்லையைக் கண்காணிப்பது குறித்து பிற நாடுகள் கவலைகொள்ள வேண்டாம், நாட்டின் எல்லைகளை கண்காணிக்க துருக்கியிடமிருந்து 3 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) மாலைதீவு வாங்கியுள்ளதாக அந்நாட்டு அதிபா் முகமது முய்சு தெரிவித்துள்ளாா்.
இந்த…
உயிருடன் ஒப்படைக்கவே விரும்பினேன்., நவால்னியின் மரணம் குறித்து மௌனம் கலைத்த புடின்
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதல்முறையாக பதிலளித்துள்ளார்.
கைதிகளின் பரிமாற்றத்தின் கீழ் ரஷ்ய சிறையில் இருந்து நவால்னி விடுவிக்கப்பட விரும்பியதாக அவர் கூறினார். எனினும்,…
வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்ட எட்டு பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வவுனியா வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எட்டுபேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 08.03.2024 ஆம்திகதி வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின்போது குறித்த எட்டுபேரும் பொலிஸாரால் கைது…
எதிர்வரும் 25 தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்!
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 25 ம் திகதி பங்குனி உத்தர நன்னாளில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 20 ம் திகதி காலை கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் ஆரம்பமாகவுள்ளதுடன் 21ம் திகதி நண்பகல் 12 மணி முதல் 24 ம்…
பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவித்தலில் பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்காவிடின் தமக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
நாடாளுமன்றுக்குள் பதற்றம்! போராட்டத்தில் குதித்த தமிழ் எம்.பிக்கள்
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்தது, 8 தமிழ் இளைஞர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெடுக்குநாறிமலை…
KKS கல்லூரி வீதிக்கு ரயில் கடவை பொருத்துமாறு கோரிக்கை
யாழ்ப்பாணம்,காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரி வீதி அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களின் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடேஸ்வரா கல்லூரிக்கு…
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றுவதையும் செயற்படுவதையும் தடுக்குமாறு கோரி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஹிருணிகா தனது…
பிரித்தானியாவில் அரைக் கம்பத்தில் பறந்த தேசிய கொடி; இளவரசி கேட் இறந்துவிட்டதாக போலி செய்தி
பிரித்தானியாவின் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறப்பது போன்ற புகைப்படம் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக பிரித்தானிய இளவரசி கேட் தொடர்பில் பல சர்ச்சை கருத்துக்கள் பரவி வந்த நிலையில், தற்பேது தேசிய கொடி…