;
Athirady Tamil News

அக்.1-ந்தேதி நாடு முழுவதும் பொது இடங்களில் தூய்மைப்பணி: பொதுமக்கள் பங்கேற்க மத்திய அரசு…

நாடு முழுவதும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதிவரை 'சுகாதார சேவை' என்ற பெயரில், பிரமாண்ட தூய்மைப்பணி நடந்து வருகிறது. மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, இந்த பிரசாரம் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 1-ந் தேதி காலை 10…

நைஜருடனான அனைத்து இராணுவ ஒத்துழைப்பையும் நிறுத்தும் பிரான்ஸ் !!

நைஜருடனான அனைத்து இராணுவ ஒத்துழைப்பையும் நிறுத்தப்போவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நைஜரில் ஏற்பட்டுள்ள ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதோடு, சில மணி நேரங்களில் பிரான்ஸ் தனது தூதரை…

பிரமோற்சவ விழா கோலாகலம்: திருப்பதியில் தேரோட்டம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ 7-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 8-வது நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது.…

கனேடிய மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கும் ஜஸ்டின் ட்ரூடோ !!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அந்நாட்டு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. லிபரல் கட்சித் தலைவரான ஐஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு முதல் கனடா நாட்டு பிரதமராக இருந்து வருகிறார். இந்நிலையில்…

போலீஸ் விசாரணை முடிந்தது: சந்திரபாபு நாயுடுவுக்கு காவல் நீட்டிப்பு!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் அவரை சி.ஐ.டி போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 14…

மூன்று மாதங்களாக தொடர் வன்புணர்வு: பாகிஸ்தானில் தந்தையை சுட்டுக் கொன்ற மகள் !!

பாகிஸ்தானில் 3 மாத காலமாக தன்னை வன்புணர்விற்குட்படுத்தியமையால் சிறுமி ஒருவர் தனது தந்தையை சுட்டு கொலை செய்துள்ளார். குறித்த சம்பவமானது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ஜர்புரா பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.…

வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கல் இடைநிறுத்தம்!!

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கணினி அமைப்பை மேம்படுத்துவதற்காக செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 02 வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம்…

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சிறைத் தண்டனை!!

பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டில் சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் 05 வருட சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.…

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஜெயக்குமார் டானுகா என்ற…

யாழில். இளைஞனை கடத்தி தாக்கி கொள்ளை – மூவர் கைது!!

இளைஞனை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று தாக்கி , அவரது பெறுமதியான கைத்தொலைபேசி மற்றும் மணிக்கூடு என்பவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மானிப்பாய்…

இலவச சிகிச்சை அளிப்பதில் முன்னணி: கேரளாவுக்கு தேசிய விருது!!

மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சேவையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் ஆரோக்கிய மந்தன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த விருதை கேரள மாநிலம் வென்றுள்ளது. ஏராளமானோருக்கு இலவச சிகிச்சை அளிப்பதில்…

கனடா பிரதமருக்கு எதிராக வெடித்தது போராட்டம் !!

இந்தியாவுக்கு எதிரான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுக்கு எதிராக புதுடில்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் இடம்பெற்றுள்ளது. தம் நாட்டின் மீது குற்றஞ்சாட்டியதுடன், காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் கனடா பிரதமரின்…

கர்நாடகாவில் கூடுதல் மதுக்கடை திறக்க அரசு முடிவு!!

கர்நாடக கலால் துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார். அப்போது உரிமம் புதுப்பிக்கப்படாமல் உள்ள 379 எம்.எஸ்.ஐ.எல்., மதுக்கடைகளை புதிதாக ஏலம் விடுவது, உரிமம் புதுப்பிப்புக்கு 4 மடங்கு அதிகமாக கட்டணம் நிர்ணயிப்பது.…

உலகிலேயே மிக பெரிய இந்து கோயில் அமெரிக்காவில் அடுத்த மாதம் திறப்பு!!

இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா (BAPS) எனும் இந்து மத அமைப்பினால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வரும் அந்நாட்டிலேயே மிக பெரிய இந்து கோயில், வரும் அக்டோபர் 8ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. பிறகு 10…

துணிச்சல் உள்ளதா?.. ராகுல் காந்திக்கு சவால் விடும் ஐதராபாத் எம்.பி. ஒவைசி!!!

வரும் 2024 இந்திய பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியையும், அதனை சேர்ந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும் எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி I.N.D.I.A. கூட்டணி எனும் எதிர்கட்சிகள் கூட்டணி மிக தீவிரமாக…

சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமா?.. இங்கு செல்லுங்கள்!!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள். வளங்களை குவித்து முன்னேற துடிப்பதால், பல்வேறு காரணங்களால் மனிதர்கள் இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர். இதனால்…

கேரளாவில் புதிதாக நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை: கோழிக்கோடு இயல்பு நிலைக்கு…

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் பலியாகினர். இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் காதாரத்துறை உடனடியாக களத்தில் இறங்கியது.…

கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் பெற்றோர் கவலை: பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க…

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா-கனடா இடையே மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையில் இந்திய ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி உள்ளார். இந்த…

விநாயகர் ஊர்வலத்தில் நடனமாடியதை தட்டிக்கேட்ட மனைவி கொலை: கணவர் வெறிச்செயல்!!

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அபர்ணா (வயது 35). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அபர்ணா தனது கணவருடன் தலித்வாடா கிராமத்தில் உள்ள தாய்…

சிங்கப்பூரில் இனவெறி பிரச்சினை: இந்தியர்கள் என கருதி தாய்-மகளை திட்டிய சீனா கார் டிரைவர்!!

சிங்கப்பூரை சேர்ந்தவர் ஜனெல்லா ஹோடன் (வயது 47) சம்பவத்தன்று இவர் தனது 9 வயது மகளுடன் வெளியில் செல்வதற்காக கால் டாக்சிக்கு முன்பதிவு செய்து இருந்தார். அதன்படி கால் டாக்சி நிறுவனத்தில் இருந்து காரும் அனுப்பப்பட்டது. அந்த காரில் ஜனெல்லா…

பெங்களூருவில் நாளை முழு அடைப்பு போராட்டம்: ஆட்டோ, பஸ்கள் ஓடாது; பள்ளி, கல்லூரிகள்…

சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மைசூரு, மண்டியா உள்பட 5…

குறுங்கோளிலிருந்து மண்துகள்கள் பூமிக்கு வந்தது: சாதித்து காட்டிய நாசா!!

ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின் மத்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா (NASA) பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறது. 2016 செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் புளோரிடா…

”2024 இல் மீண்டும் தாக்குதல் நடக்கும்” !!

உயிர்த்த ஞாயிறு அன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் போல மற்றுமொரு தாக்குதல் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, 2019 ஆம் ஆண்டு…

28 அன்று தாமரை கோபுரம் இரு நிறங்களில் ஒளிரும் !!

புனித நபி முஹம்மது பிறந்தநாளான 2023 செப்டம்பர் 28ஆம் திகதியன்று தாம​ரை கோபுரம் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளிரும் என்று தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!! (PHOTOS)

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது. தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் தாயகம் எங்கும் உணர்ச்சியுடன் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாண…

கோழிக்கோட்டில் 10 நாட்களுக்கு பிறகு பள்ளி-கல்லூரிகள் நாளை திறப்பு!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதித்து 2 பேர் அடுத்தடுத்து பலியாகினர். இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார்செய்து, அவர்களில் நோய் அறிகுளிகள் உள்ளவர்களுக்கு நிபா வைரஸ் பரிசோதனை…

ராஜமுந்திரி ஜெயிலில் சந்திரபாபு நாயுடுவிடம் சி.ஐ.டி. அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை!!

ஆந்திர பிரதேச முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக சி.ஐ.டி. அதிகாரிகள் அவரை கைது செய்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில்…

யாழில் பிரமாண்ட இசை நிகழ்வு!!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு என தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த சந்தோஷ் நாராயணன் , மாலை…

பொது நினைவுச்சின்னம் பேரினவாதம் உயிரோடிருக்கும் வரை தமிழினம் அனுமதியாது!!

ஜனாதிபதிச் செயலகம் போரில் இறந்த இராணுவத்தினர், விடுதலைப் போராளிகள், பொதுமக்கள் ஆகிய முத்தரப்பினருக்கும் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதாக முடிவெடுத்து அதனை விரைவில் நிறுவுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக…

சாந்தனை மீட்டு தருமாறு கோரும் தாய்!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறார். பிரதமர் கொலை வழக்கில்…

வயநாடு தொகுதியில் போட்டியிட கூடாது: ராகுல்காந்திக்கு கம்யூனிஸ்டு ‘திடீர்’…

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது ராகுல்காந்தியை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்டது. தேர்தலில்…

ஈரான்-மாலத்தீவுகள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தூதரக உறவு!!

ஈரானின் நட்பு நாடாக இருந்த மாலத்தீவுகள் சுமார் 40 ஆண்டுகள் அதனுடன் தூதரக உறவை கொண்டிருந்தது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் விவகாரத்தில் அதன் கொள்கைகள் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மாலத்தீவு கருதியது.…

லேண்டர், ரோவர் செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்!!

நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணியில் ஈடுபட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் சூரிய சக்தி மூலம் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனால் லேண்டர், ரோவர் நிலவில் தரையிறங்கிய அடுத்த 14 நாட்களுக்கு தனது…

அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தால் பொருளாதாரம் வீழ்ச்சி: பொதுமக்கள் கருத்து!!

அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 80) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அங்கு அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணிகள் தற்போதே…