;
Athirady Tamil News
Yearly Archives

2025

பருத்தித்துறையில் உணவகத்திற்கு சீல்

பருத்தித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளது பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்களினால்…

யாழ்.போதனாவில் மற்றுமொரு தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாயொருவர் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடுவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் 29 வயதுடைய தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

போதைப்பொருள் கடத்தல்; தமிழரை தூக்கிலிட்ட சிங்கப்பூர்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்காக, மலேசிய நபரொருவர் துக்கிலிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என சிங்கப்பூரில் கோரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த வருடத்தின் 11வது மரணதண்டனையாக இது…

மரத்தில் மோதி வேன் கோர விபத்து; 11 பேர் மருத்துவமனையில்

மஹியங்கனை - கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம் தூண் பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (26) இரவு 11…

நிறுவன ஊழியர்களுக்குள் அடிதடி; பெண் உயிரிழப்பு

நிறுவனத்தில் இருவருக்கு இடைஇயில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெலிக்கடை பொலிஸ் பிரிவின் அங்கொடை பகுதியில் நேற்று (26) மாலை இச்சம்பவம் நிகழ்ந்ததாகப்…

யாழில். பிறந்த சில நிமிடங்களில் உயிரிழந்த இரட்டை குழந்தைகள் – தாயும் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாயொருவர் இரட்டை குழந்தைகளை பிரசவித்த நிலையில் , இரட்டை குழந்தைகளும் உயிரிழந்திருந்தன. அந்நிலையில் தாயார் தீவிர சிகிசிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாயாரும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்…

இளைஞரின் வயிற்றில் 29 கரண்டிகள், 19 டூத் பிரஷ்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து 29 ஸ்டீல் ஸ்பூன், 19 டூத் பிரஷ்களை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தில் இந்த வினோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹாப்பூரில்…

ரகசா புயல் ; இருளில் மூழ்கிய 5 லட்சம் வீடுகள்!

ரகசா புயல் தைவானைப் புரட்டி போட்ட நிலையில் 5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகின்றது. தென் சீனக்கடலில் உருவான ரகசா புயல் தைவானைப் புரட்டி போட்ட நிலையில் குவாங்டாங் மாகாணத்தையும் தாக்கியது. அப்போது மணிக்கு 265 கிலோ மீட்டர்…

அரியானாவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு

அரியானாவின் சோனிபட் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 1.47 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.99 டிகிரி…

வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்படும் இரண்டு இலங்கையர்கள்

இஸ்ரேலில் பணிபுரியும் இரண்டு இலங்கையர்கள், போதைப் பழக்கத்திற்கு அடிமையான நிலையில், நாடு கடத்தப்படுவார்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அவர்கள் நாடு திரும்புவதற்கு வசதிகளை…

வைத்தியசாலையில் உயிரிழந்த தமிழ் இளைஞன் ; பிரதேச மக்களால் பதற்றம்

அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாததாலேயே உயிரிழந்தார் என பிரதேச மக்கள் சிலர் குற்றஞ்சாட்டினர்.…

யாழில் பெண் குழந்தையின் மரணத்தால் பெரும் துயர் ; கொழும்பிற்கு அனுப்பப்படும் உடற்கூற்று…

யாழில் பிறந்து நான்கு மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று(26) உயிரிழந்துள்ளது. உடுவில் கிழக்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடல்நிலையில் மாற்றம் மேலும் தெரியவருகையில், குறித்த…

யேமன் தலைநகரின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

யேமன் தலைநகர் சனா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதாக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது, கடந்த செப்.24 ஆம் தேதி ஹவுதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில், 22 பேர்…

திருநெல்வேலியில் கடை உடைத்து 27 இலட்ச ரூபாய் பொருட்கள் திருட்டு – நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் கடை ஒன்றினை உடைத்து சுமார் 27 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை களவாடிய குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி பகுதியில் உள்ள கடையொன்றினை நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு வேளை உடைத்து ,…

ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி

ரஷியா தொடங்கிய போரை நிறுத்துவதற்கு உலக வல்லரசு நாடுகள் உதவுமாறு கேட்டுக்கொண்ட உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, போரை நிறுத்த உதவாவிட்டால் ஆபத்தான ஆயுதப் போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்றார். நியூயார்க்கில் ஐ.நா.…

உடல் உறுப்புகளுக்காக குழந்தைகள் கொலை ; கொடூர பெண்குற்றவாளி கைது!

வடக்கு மெக்சிகோவில், குழந்தைகள் மற்றும் உடல் உறுப்புகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த ‘லா டியாப்லா’ என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா-மெக்சிகோ கூட்டாண்மை நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட அவர்,…

போர் முடிந்ததும் பதவி விலக தயார் – உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதி

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடன் நடக்கும் போர் முடிந்தவுடன் தான் பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். Axios-க்கு அளித்த பேட்டியில், "போர் முடிந்தால், தேர்தலுக்கு செல்லமாட்டேன். ஏனெனில் என் நோக்கம் தேர்தல் அல்ல,…

கனடாவில் பிஸ்தா சாப்பிட்ட 105 பேருக்கு உடல் நலம் பாதிப்பு

கனடாவில் பிஸ்தா மற்றும் பிஸ்தா சேர்த்த இனிப்பு வகைகளை உட்கொண்ட 105 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடா பொது சுகாதார ஏஜன்சி தெரிவித்துள்ளது. பிஸ்தாவில் நோய்க்கிருமிகள் பிஸ்தா, பிஸ்தா சேர்க்கப்பட்ட பக்லாவா என்னும் இனிப்பு, ஐஸ்கிரீம்…

அரசாங்கத்தின் இரண்டாவது பட்ஜெட்

முருகானந்தம் தவம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசின் இரண்டாவது வரவு- செலவுத்திட்டமான 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் 26…

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள்.. திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு.. அடுத்து நடந்த…

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா டேகல் புரசபை செட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 19). இவரும் பனமாகனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுவேதா (18) என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம்…

இலங்கை தொழிலதிபரிடம் 300 மில்லியன் மோசடி செய்த இந்திய பிரஜை

இலங்கை தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.300 மில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜை ஒருவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம நேற்று (25) உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பான…

13 மாத குழந்தை கொடூரக் கொலை! 17 ஆண்டு வழக்கில் கொலையாளிக்கு விஷ ஊசியால் மரண தண்டனை!

அமெரிக்காவில் குழந்தையை சித்ரவதை செய்து கொன்ற வழக்கில், கொலையாளிக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. 2008 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பிலெய்ன் மிலெம் என்பவர், தன்னுடைய காதலியின் 13 மாத குழந்தையான அமோராவை…

பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலை மாணவர்களுக்கு சிறை!

வயம்ப பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர் ஒருவருக்கு பகிடிவதை செய்ததாக கூறப்படும் நான்கு மாணவர்களை செப்டெம்பர் 29ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வயம்ப பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர்…

அதிக கட்டணம் வசூலித்து தீர்ப்புகள் ; கணவர் தலையீட்டால் யாழ் மல்லாகம் நீதிபதி இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சுபராஜினி ஜெகநாதனின் சேவையை நீதித்துறை சேவை ஆணைகுழு கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தியுள்ளது. வழக்கறிஞரான அவரது கணவரின் அறிவுறுத்தல்கள் மற்றும் கோரிக்கைகளின்படி அவர் பல தீர்ப்புகளை தவறாக…

பிரான்ஸ் முன்னாள் அதிபா் சாா்கோஸிக்கு 5 ஆண்டுகள் சிறை

கடந்த 2007-ஆம் ஆண்டில் தனது தோ்தல் பிரச்சாரத்துக்காக லிபியாவிடமிருந்து நிதி பெற்று சதிச் செயலில் ஈடுபட்டதாக பிரான்ஸ் முன்னாள் அதிபா் நிக்கலஸ் சாா்கோஸிக்கு (70) அந்த நாட்டு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அண்மைக்கால…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜப்பானுக்கு பயணம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜப்பான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு மேற்கொண்ட விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுறுத்தி ஜனாதிபதி அநுர ஜப்பானுக்கு…

3 வாகனங்கள் மோதி 11 பேர் காயம்

பண்டாரகம-களுத்துறை வீதியில் லொறி, வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் நடனக் குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொரந்துடுவவிலிருந்து…

யாழில் இருந்து சென்ற ரயில் மோதி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் சிராவஸ்திபுர ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (26) அதிகாலை 1.00 மணியளவில் இந்த…

4 இடங்களில் அணு ஆயுத எரிபொருள் தயாரிப்பு: வட கொரியா மீது குற்றச்சாட்டு

வட கொரியாவிலுள்ள நான்கு இடங்களில் அணு ஆயுத எரிபொருளாகப் பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் ஆலைகள் இயங்குவதாக தென் கொரியா வியாழக்கிழமை குற்றச்சாட்டியது. இது குறித்து தென் கொரிய ஒருங்கிணைப்புத் துறை அமைச்சா் சங் டாங்-யங் கூறியதாவது: வட…

பழைய பூங்காவில் உள்ள சிறுவர் பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை – அரசாங்க அதிபர்…

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு - விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடக யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்…

சர்வதேச நீதி கோரி செம்மணியில் தொடர் உண்ணாவிரதம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்…

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாம் நாளாக இன்று(26) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குறித்த போராட்டம் யாழ் செம்மணியில்…

காஷ்மீா் விவகாரத்தில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா

காஷ்மீா் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடிப் பிரச்னை எனவும், அழைப்பு விடுத்தால் எந்தவொரு விவகாரத்துக்கும் தீா்வு காண அமெரிக்கா…

உயரமாக வளர சிகிச்சை பெற்ற சிறுவன் – இறுதியில் நடந்த ஷாக் சம்பவம்!

சிறுவன் உயரத்தை அதிகரிக்க சிகிச்சை பெற்று நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயரம் அதிகரிக்க.. சீனாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் விலையுயர்ந்த உயரம் அதிகரிக்கும் சிகிச்சையை மேற்கொண்டார். இந்த சிகிச்சையின் மூலம் அவர் 1.4 செ.மீ.…

நல்லூரில் திலீபனின் நினைவிடத்தில் 38-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபத்தின் உயிர் பிரிந்த…