;
Athirady Tamil News
Yearly Archives

2026

இது பாண்டாவா? இல்லை மனிதனா?… ஜப்பான் பூங்காவில் நடந்த வித்தியாச சம்பவம்

டோக்கியோ, ஜப்பானில் உள்ள பூங்கா ஒன்றில் பாண்டாக்கள் இல்லாததால், பூங்கா பராமரிப்பாளர்கள் பாண்டா வேடமணிந்து பார்வையாளர்களுக்கு வேடிக்கை காட்டி வருகின்றனர்! பூங்காவில் இருந்த 4 பாண்டாக்களும் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதால் நிர்வாகம்…

இலங்கையில் மாற்றம் காணாத தங்கம் விலை!

நாட்டில் கடந்த சனிக்கிழமையுடன் (10) ஒப்பிடுகையில், நேற்றுவரை (12) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் அதிகரித்தது. இந்நிலையில், இன்று (13) இதுவரை தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு நகையக…

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு செய்யப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. இது குறித்து நீதிமன்றத்தின்…

பணிப்பகிஸ்கரிப்பால் கிழக்கில் முடங்கிய மருத்துவ சேவைகள்

கிழக்கு மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (13) அரச மருத்துவ அதிகாிகள் சங்கத்தினர் பணிப்பகிஸ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். நிர்வாக மற்றும் நிதி முறைகேடு தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை பதவியிலிருந்து…

கிரீன்லாந்து பாதுகாப்பு நேட்டோவுக்குத்தான் சொந்தம்: பிரதமா் நீல்சன்

கிரீன்லாந்தின் பாதுகாப்பும் தற்காப்பும் நேட்டோ கூட்டணிக்கே சொந்தம் என்று அந்தப் பிராந்திய பிரதமா் ஜென்ஸ்-பிரெடரிக் நீல்சன் தெளிவுபடுத்தியுள்ளாா். இது குறித்து தனது ஃபேஸ்புக் பதிவில் அவா் கூறியதாவது: கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின்…

வெனிசுலாவில் அரசியல் கைதிகள் விடுவிப்பு நடவடிக்கை மந்தம்

கரகாஸ், 2024-ம் ஆண்டு வெனிசுலாவில் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததாகக்கூறி அரசியல் எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள், மனித உரிமை வக்கீல்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி அமெரிக்கா…

வீதியில் வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர் தாக்குதல்; பரபரப்பை ஏற்படுத்திய…

கடுவலை - கொள்ளுபிட்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ள நிலையில் , சந்தேக நபர் கைது…

மஹிந்தவிடமும் பிரியாவிடை பெற்றார் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து ஜூலி சாங் (Julie Chung),புறப்படவுள்ளார். இந்நிலையில் ஜூலி சாங் (Julie Chung) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இந்த…

5 இலட்சத்திற்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் நீக்கம்

அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை காரணமாக சுமார் 544,000 கணக்குகள் மெட்டா நிறுவனத்தினால் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்திற்கு இணங்கிய முதல் வாரத்தில், இன்ஸ்டாகிராமில் 330,639 கணக்குகளும்,…

ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு எங்களுக்குச் சொந்தமானது: இந்தியாவின் ஆட்சேபத்தை நிராகரித்தது சீனா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்த ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சீனாவின் கட்டுமானப் பணிகளுக்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், ‘அப்பகுதி எங்களுக்குச் சொந்தமானது; அங்கு மேற்கொண்ட உள்கட்டமைப்புப் பணிகள் சட்டபூா்வமானவை என்று சீனா…

யாழில் Lunch Sheet பயன்பாடு முற்றாகத் தடை! மீறினால் கடும் நடவடிக்கை

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் லஞ்சீற் (Lunch Sheet) பயன்பாடு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஊர்காவற்துறை சபையின் தவிசாளர் அன்னராசா…

உலக அரசியல் திருப்பம் ; இணைய முடக்கத்தை உடைக்க ட்ரம்ப் போட்ட திட்டம்

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு முடக்கப்பட்டுள்ள இணையச் சேவையை மீண்டும் வழங்குவதற்காக ஈலோன் மஸ்கின் தொழில்நுட்ப உதவியை நாட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். ஈரானின் பல்வேறு…

மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறிய மகளை கொலை செய்த தந்தை; 30 ஆண்டுகள் சிறை

நெதர்லாந்து நீதிமன்றம் ஒன்று, தனது 18 வயது மகள் ரியானைக் கொலை செய்த குற்றத்திற்காக 53 வயதான காலித் அல்-நஜ்ஜாருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. பாதிக்கப்பட்டவர் மே 2024-ல் ஒரு இயற்கை வனப்பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில்…

ஓடும் காரில் பிளஸ் 2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – அதிர்ச்சி சம்பவம்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் பிகனேர் மாவட்டம் நபசர் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கடந்த 6ம் தேதி காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். கிராமத்தில் உள்ள சாலையில் நடந்து சென்றபோது மாணவியை பின் தொடர்ந்து கார் வந்துள்ளது.…

குடும்பஸ்தரின் உயிரைப் பறித்த மின்சாரம்

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தவலந்தன்ன பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் ரம்பொடை 50 ஏக்கர் தோட்டத்தை சேர்த்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராஜகோபால் தியாகன்…

யாழில் பெண் ஒருவர் திடீர் மரணம்

யாழில் இதயம் செயலிழந்ததால் குடும்பப் பெண்ணொருவர் நேற்று (12) உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு நேற்றையதினம் நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள்…

பிரதேசசபை பெண் உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்

கம்பஹா, வெலிவேரிய, எம்பரலுவ பிரடீதசத்தில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கம்பஹா பிரதேச சபை உறுப்பினர் தனுஜா ஸ்ரீயந்தியின் வீட்டின் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம்…

இலங்கைக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்திய மத்தள விமான நிலையம்

மத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 39.3 பில்லியன் ரூபாய் நிகர இழப்பைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் மற்றும் அரச பங்களிப்புடன்…

வெனிசுவேலாவில் இருந்து வெளியேறுங்கள்; அமெரிக்க பிரஜைகளுக்கு உத்தரவு!

வெனிசுவேலாவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான சேவையை பயன்படுத்தி, அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா தனது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்புஇல் வெனிசுவேலாவில் உள்ள அமெரிக்க தூதரகம்…

பெண்கள் ஆபாசமாக சித்தரிப்பு: குரோக் ஏஐ-க்கு எதிராக பிரிட்டனில் விசாரணை

தொழிலதிபா் எலான் மஸ்குக்குச் சொந்தமான எக்ஸ்-ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலியான குரோக், பெண்களை ஆபாசமாக சித்திரிப்பதாகக் கூறப்படும் புகாா்கள் குறித்து பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான தகவல் அலுவலகம்…

கரூர் வழக்கில் CBI தலைமையகத்தில் விஜய் ; நடந்தது என்ன?

கரூர் மாவட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமையகத்தில் நேரில் முன்னிலையானார். சுமார் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளுடன் அதிகாரிகள் அவரிடம் தீவிர…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்தும் , லொறியும் மோதி விபத்து; தப்பிய உயிர்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (13) காலை பேருந்தும் , லொறியும் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் லொறியொன்றும் பேருந்து ஒன்றும் மோதி…

மட்டக்களப்பில் வயோதிய தம்பதி தற்கொலை; 12 நாட்களில் 6 பேர் உயிர் மாய்ப்பு; அதிர்ச்சி தரும்…

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் முதியவர்களான கணவனும் மனைவியும் விஷம் உட்கொண்டு உயிரை மாயத்துக் கொண்ட சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தன்னாமுனை இராசையா லேனைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவரும், அவரது…

காதல்வயப்பட்ட 13 சிறுமி; முன்னாள் காதலன் கொலை மிரட்டல்

புத்தளம், சிலாபம், பங்கதெனிய பிரதேசத்தில் காதலை துண்டித்த கொலை மிரட்டல் விடுத்த காதலன் சிலாபம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பங்கதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய காதலனே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம்…

பொங்கலை முன்னிட்டு திருநெல்வேலியில் அமுலுக்கு வரும் போக்குவரத்து நடைமுறை

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்குடன் ஆடியபாதம் வீதியில் இராமசாமிப் பரியாரியார் சந்தியில் இருந்து திருநெல்வேலிச் சந்தி நோக்கி கனரக வாகனங்கள் மட்டும் உள்நுழைவதற்கு…

அமெரிக்காவுடன் போரிடவும் தயாா்: ஈரான்

அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்தவும் தயாா், தேவைப்பட்டால் போரிடவும் தயாா் என்று ஈரான் அதிபா் மசூத் பெஸெஷ்கியான் தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது உரையில் அவா் கூறியதாவது: அமெரிக்காவுடன் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தவும், உடன்பாடு…

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 10 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை அத்துமீறல் நுழைந்து…

யாழில் திருட்டு போன மோட்டார் சைக்கிள் ; CCTV காட்சிகள் அடிப்படையில் விசாரணை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த 11 ஆம் திகதி குறித்த குடும்பஸ்தர்…

பிஎஸ்எல்விசி62 ராக்கெட் தோல்வி: பசிப்பிக் கடலில் விழுந்த செயற்கைக்கோள்கள்

ஸ்ரீஹரிகோட்டா, இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி 62 இன்று விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே தனது பாதையில் இருந்து விலகிச் சென்றதால் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளை மட்டுமின்றி, நாட்டு…

மான் தாக்கி விவசாயி உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்

குருணால் ஹேரத்கம பகுதியில் காட்டு யானைகளிடமிருந்து விவசாய நிலத்தை பாதுகாக்கச் சென்று, வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், மான் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே சம்பவத்தில் மேலும் ஒருவர் படு காயமடைந்து வைத்தியசாலையில்…

நீதியின் மேடையில் நம்பிக்கை சிதைந்த தருணம் ; நீதிமன்ற பதிவாளருக்கு நேர்ந்த கதி

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர், எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த…

இலங்கை–அமெரிக்க உறவுகளில் திருப்பம்?கொழும்பில் இருந்து வெளியேறும் ஜூலி சங்

இலங்கையில் அண்மைக்காலமாக முக்கிய இராஜதந்திர நகர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து நாட்டை விட்டு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவல்களின்படி, ஜனவரி…

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

வங்கதேச சிறையில் இருந்துவந்த அந்நாட்டுப் பாடகர் புரோலாய் சாகி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) காலமானார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

‘வெனிசுவேலாவின் செயல் அதிபர் டொனால்ட் டிரம்ப்’ என்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக குற்றச்சாட்டை…