;
Athirady Tamil News
Yearly Archives

2025

பாகிஸ்தானின் பாதுகாப்பு படைகளின் தலைவராக அசிம்முனீர் நியமனம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. இதற்காக அரசியல் சாசனத்தின் 243-வது பிரிவில் 27-வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. இந்தியாவின் ஆபரேசன்…

ஜெனரேட்டர் புகையை சுவாசித்ததால் பெண் உயிரிழப்பு

வீடொன்றினுள் இயங்கிக்கொண்டிருந்த மின்பிறப்பாக்கியிலிருந்து (ஜெனரேட்டர்) வெளியான நச்சுவாயுவை சுவாசித்ததால் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம், உறவினர்களிடம் இன்று (6) ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் கடந்த 04 ஆம் திகதி…

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது…

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். WASPAR திட்டத்தின் ஊடாக இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண நிர்வாகம் தனது…

வடக்கில் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவித்தல்

வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாகப்…

கனடாவில் வேலையற்றோர் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவின் வேலை சந்தை நவம்பரில் பொருளாதார நிபுணர்களை மீண்டும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாட்டில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவானதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக சிறு அளவிலான வேலை இழப்பு…

அழகான பெண் பிள்ளைகளை பிடிக்காது: இளம்பெண் செய்த பயங்கர செயல்கள்

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் தன் சொந்த மகன் உட்பட நான்கு சிறுபிள்ளைகளைக் கொன்ற இளம்பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களை கொலை செய்ததற்காக அவர் கூறியுள்ள காரணம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. நான்கு சிறுபிள்ளைகளைக் கொன்ற…

ஜஸ்டின் ட்ரூடோ – கேட்டி பெர்ரி உறவு வதந்தி மீண்டும் பரபரப்பு

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்கப் பாடகி கேட்டி பெர்ரி இடையேயான காதல் வதந்தி மாதக்கணக்கில் சர்வதேச ஊடகங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. அண்மையில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிதா தன் மனைவியுடன்…

பொலிஸ் அதிகாரிகள், அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

நாட்டில் நிலவும் அனர்த்த நிலையைக் கருத்திற் கொண்டு சில அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுகாதார ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள்

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைக்கவுள்ளதாக மிச்சிகன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர் தெரிவித்துள்ளார். கரீபியன் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை என்ற…

25,000 ரூபா கொடுப்பனவில் யாழ்ப்பாணத்தில் ஊழல் இடம்பெறாது!

நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவில் யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான ஊழல்களும் இடம்பெறாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்…

காணி பிரச்சனையில் பறிபோன உயிர்; 71 வயது நபர் கைது

மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றிய நிலையில், தாக்குதலுக்கு உள்ளாகிய ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது.…

புடினுக்கு மோடி வழங்கிய இந்திய பாரம்பரிய பரிசுகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இந்திய கலாச்சாரத்தின் செழுமையை பிரதிபலிக்கும் பல்வேறு பரிசுகளை வழங்கியுள்ளார். பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பரிசுகள் அதில் அசாம் தேயிலை, முர்ஷிதாபாத் வெள்ளி தேநீர் செட்,…

வெள்ளத்தில் இறந்த மீன்களை உண்ண வேண்டாம்!

வெள்ளத்திற்குப் பின்னர் காணப்படும் இறந்த மீன்களை மக்கள் உண்பதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம், நோய் அல்லது காயங்கள் காரணமாக இறக்கும் விலங்குகளின் உடலங்களைச் சரியாகக் கையாளாவிட்டால், அவை தீவிர சுகாதார அபாயங்களை…

இங்கிலாந்தில் 200 வீடுகளில் அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள் ; இரண்டு பேர் கைது

இங்கிலாந்தின் டெர்பி (Derby) நகரத்தில் வெடிபொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டதையடுத்து, வல்கன் வீதி (Vulcan Street) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள்…

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி அடையாளம்

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் நேற்றயதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராமத்தில் வசிக்கும் ஒருவரே எலிக்காய்ச்சல் நோயாளியாக அடையாளம் காணப்பட்டார். குருதி…

பம்பலப்பிட்டியில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; ஐவருக்கு நேர்ந்த கதி

கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்ட வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் மீது லொறி மோதியதில் இந்த…

சர்வதேச ரீதியில் யாழ் இளைஞனுக்கு கிடைத்த அங்கீகாரம் ; குவியும் பாராட்டுக்கள்

இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத் தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant for Future Tomorrow Category யில் சர்வதேச வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு உலகின் 68…

500 விமானங்கள் இரத்து; முடங்கியது இண்டிகோ விமான சேவை

இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 500 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால், விமான நிறுவனம் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் விளைவாக, ஆறு முக்கிய விமான நிலையங்களில்…

அமெரிக்கா குடியுரிமைக்கு இவர்கள் விண்ணப்பிக்க கூடாது; டிரம்ப் கடும் உத்தரவு!

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவர்களை கைது செய்து நாடு கடத்தப்படுகிறார்கள். இந்நிலையில், அமெரிக்காவில் குடியுரிமை…

தாயாருக்கு வீடு கட்ட சேமித்த மில்லியன் ரூபா பணத்தை நாட்டுக்கு நன்கொடையாக வழங்கிய இளைஞன்

அனர்த்தத்தின் பின்னர் Rebuilding Sri Lanka திட்டத்திற்காக ஜனாதிபதி விருது பெற்ற வணிக முயற்சியாளர் தனது தாயாருக்கு வீடொன்றைக் கட்டுவதற்கென சேமித்து வைத்திருந்த 2 மில்லியன் ரூபா பணத்தை நிவாரண நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். டித்வா…

மண்சரிவில் சிக்கி மூன்று நாட்களின் பின் மண்ணுக்குள் இருந்து உயிரோடு வந்த குடும்பம்

டித்வா புயல் தாக்கத்தினால் பசறை மலைச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் மூன்று நாட்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக பசறைப்பகுதியில் கனமழை பொழிந்து பல வீடுகள் மண்சரிவில் மூழ்கியிருந்தது…

யாழில். துவிச்சக்கர வண்டிகளை களவாடி வந்த கும்பல் கைது

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ் . நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி காணாமல் போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு…

யாழ் மாநகர சபையின் 2026 வரவு-செலவுத் திட்டம் 2 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்!

யாழ் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு - செலவுத் திட்டம் இன்று யாழ். மாநகர சபையின் சபா மண்டபத்தில் முதல்வர் வி.மதிவதனியால் சபை அங்கீகாரத்துக்காகச்…

18 வயதில் ராணுவ சேவை திட்டம்: ஜொ்மனி நாடாளுமன்றம் ஒப்புதல்

18 வயது நிறைந்த இளைஞா்களுக்கான தன்னாா்வ ராணுவ சேவை திட்டத்தை கொண்டு வருவதற்கான சட்டத்துக்கு ஜொ்மனி நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக்குப் பிறகு ஜொ்மனியின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில்…

எந்த வழியிலும் டான்பாஸைக் கைப்பற்றியே தீருவோம்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் டொனட்ஸ்க், லுஹான்ஸ் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய டான்பாஸ் பகுதியை எந்த வழியிலும் முழுமையாகக் கைப்பற்றியே தீருவோம் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை உறுதிபடத் தெரிவித்துள்ளாா். வியாழக்கிழமை…

அமெரிக்காவுக்கு செல்ல 30 நாடுகளுக்கு தடையா? பரிசீலனை செய்கிறது ட்ரம்ப் நிர்வாகம்

சமீபத்தில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க தேசிய காவல் படை வீரர்கள் மீது ஆப்கனை சேர்ந்த ஒருவர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களின் அனைத்து குடியேற்ற கோரிக்கைகளை கால…

அமெரிக்காவில் தேடப்படும் இந்தியர் ; 50 ஆயிரம் டாலர்கள் வெகுமதி அறிவிப்பு!

அமெரிக்காவில் தேடப்படும் இந்தியர் தொடர்பில் தகவல் வழங்கினால் வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நசீர் ஹமீது (38 வயது) என்பவர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்து வந்தார். இந்தியாவில் பதுங்கி…

அமெரிக்காவில் விமான நிலையத்திற்கு அருகே விழுந்து நொறுங்கிய போர் விமானம்

அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக, விமானி உயிர் தப்பினார். அமெரிக்க விமானப்படையின் எப்-16 போர் விமானம், பயிற்சியின் போது ட்ரோனா விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது. விமானி…

எச்1பி விசாவில் மோசடி; ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு

மோசடி புகாரை தொடர்ந்து, 'எச்1பி' விசா விண்ணப்பதாரர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. அதில், 75 சதவீத விசாக்கள்…

இலங்கையில் இருந்து புறப்பட்டது இந்திய தேசிய பேரிடர் மீட்பு குழு

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மீட்பு பணிக்கு வந்த இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உறுப்பினர்கள் இன்று (05) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டனர். ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் , இலங்கை இராணுவத்துடன் ஒருங்கிணைந்து சூறாவளியால்…

எனக்கு நோபல் பரிசு வேண்டாம்; டிரம்ப் தடாலடி அறிவிப்பு!

எனக்கு நோபல் வேண்டும் என அடம்பிடித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தற்போது அது தனக்கு வேண்டாம் என கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா- பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக எனக்கு 8 நோபல் பரிசுகள்…

சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காவிடில் 50 மில்லியன் அபராதம்; அதிரடி காட்டும்…

ஆஸ்திரேலியாவில் சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காத சமூக ஊடக நிறுவனங்களுக்கு 33 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த…

டிசம்பர் 9 முதல் 11 வரை மழை அதிகரிக்கும்; வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதோடு இக்காலப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என…

கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல் – 09 பேருக்கு தண்டம்

யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கரணவாய் பொதுச்சுகாதார பிரிவில் கடந்த வாரம்…