;
Athirady Tamil News

சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் மீண்டும் குளறுபடி.. நடந்தது என்ன? நடப்பது என்ன?? (விபரமான தகவல் படங்களுடன்..)

0

சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் மீண்டும் குளறுபடி.. நடந்தது என்ன? நடப்பது என்ன?? (விபரமான தகவல் படங்களுடன்..)

கடந்த சில வருடங்களாக சுவிஸ் பேர்ண் முருகன் கோயிலில் நடைபெறும் நிர்வாகச் சிக்கல், வரவுசெலவுக் கணக்கு விபரம், தனிநபர் தாக்குதல், ஊர் பிரதேசவாதம் (இணுவிலா, அச்சுவேலியா எனும்) போன்றவற்றால் பல பின்னடைவுகளை சந்தித்து வந்த நிலையில், சுவிஸ் நீதிமன்றம் நாடி கடந்த வருட இறுதியில் தற்காலிகமாக சுமுக நிலைமைக்கு வந்தது.

மீண்டும் இவ்வாரம் சுவிஸ் பேர்ண் முருகன் கோயில் பொதுச்சபை கூடுவதாக கடிதம் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள நிலையில், பலவிடயங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக முதலில் போட்ட அழைப்புக் கடிதத்துடன் கணக்கு விபரமும் அனுப்பப்பட்டு இருந்தது, அக்கணக்கு விபரத்தில் கோயில் நிர்வாகத்தின் பொருளாளரோ, அன்றில் கணக்காய்வாளர்களோ கையெழுத்திடாமல் காணிக் கட்டிடக் குழுத் தலைவர் மட்டுமே கையெழுத்திட்டு அனுப்பி இருந்ததுடன் அக்கணக்கு விபரமும் பல பிழைகளை கொண்டு உள்ளது.

இதுகுறித்து பல அடியார்கள் விமர்சித்தவுடன் ஆலய தலைவர், பொருளாளர், நிர்வாகசபை உறுப்பினர் ஆகியோர் கையெழுத்து வைத்து மீண்டும் அனுப்பிய கணக்கு விபரத்திலும் பிழையென சுட்டிக் காட்டப்படுகிறது. உதாரணமாக சுமார் இரண்டு இலட்சத்து இரண்டாயிரம் வரவு எனக் குறிப்பிட்டு உள்ள அதேவேளை சுமார் மூன்று இலட்சத்து இரண்டாயிரம் செலவு எனக் குறிப்பிட்டு மேலதிக இருப்பு பதினொறாயிரம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.(ஆதாரம் கீழே இணைக்கப்பட்டு உள்ளது)

இதைவிட முக்கியமாக கணக்குவிபரம், நிர்வாக சீர்கேடு குறித்து கேள்வி எழுப்பியவர்களை கோயில் அங்கத்துவமே இல்லாமல் ஆக்கும் நடவடிக்கைக்காகவே இக்கூட்டம் எனவும் தெரிய வந்துள்ளது. அதாவது கேள்வி கேட்பவர்களோ, கணக்கு விபரம் கேட்பவர்களோ கோயில் மட்டுமல்ல எந்தவொரு அமைப்பிலும் இருக்க முடியாது என்பது எழுத்தப்படாத சட்டம் போல் உள்ளது.

இவ்வாலயத்தின் ஆரம்பம் முதல் வளர்ச்சி, அழிவுப்பாதை வரை அதிரடி இணையத்துக்கு கூறிய ஒருவர் தெரிவித்ததை அப்படியே கீழே தருகிறோம்..

1 ) இவ் ஆலயம் 13.04.1992 ஆண்டு ஆறுமுகம் பரமு அச்சுவேலி, சுகிர்தா (சுகி) சுண்ணாகம் மற்றும் மனோகரன் சுண்ணாகம் என்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 1995, 1996, காலப்பகுதியில் looslistr வில் நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் ஆறுமுகம் பரமு அமோக வாக்குமூலம் தலைவராகப்பட்டார். அப்போது பேர்ண் மாநிலத்தில் ஆலயத்தால் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் பாடசாலையை அதனை பொறுக்க முடியாத தற்போதைய காணி கட்டிட குழு தலைவர் சிவரட்ணராஜா ( கிளாக்கர் ) அவர்கள் முதன் முதலில் சுவிஸ்காரரின் உதவியுடன் ஆலயத்தால் நடாத்தப்பட்டு வந்த தமிழ் பாடசாலை, நடன வகுப்புக்கள் அனைத்தையும் மாற்று இடத்திற்கு கொண்டு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலை தான் தற்போது வள்ளுவர் பாடசாலையாக இயங்கி வருகிறது.

மீண்டும் ஆலயம் bahnstr Bern இற்கு பரமு தலைமையில் இட மாற்றம் செய்யப்பட்டது. அப்போது ஆலயத்துக்கு எதிராகவும் பரமுவுக்கும் எதிராக செயற்பட்ட தற்போதய காணிக்குழுவின் தலைவரை அழைத்து (சிவரட்ணராஜா) அன்றைய தலைவர் குணம், செயளாளர் ராயு தலைமையில் பொதுச்சபையின் ஆதரவுடன் 07.03.2010 புதிய யாப்பு உருவாக்கமும் காணிக்குழுவும் உருவாக்கப்பட்டது.

2011 இல் ஆலய கட்டிடம் கட்டிட உரிமையாளர்களினால் உடைக்க வேண்டி நிலமை ஏற்பட ஆலயம் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. மீண்டும் 2012 ஆண்டு பொதுச்சபை கூட்டம் இடம்பெற ஆறுமுகம் பரமு மீண்டும் அமோக வெற்றி பெற்று தலைவர் ஆனார். செயளாலர் வைத்திலிங்கம் ராஜ்க்குமார் செயளாலர் ஆனார். அன்றைய காலகட்டத்தில் உடனும் ஆலயம் இடமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதற்கமைய ஆலயத்துக்கு சொந்தமாக காணி வாங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஆலய தலைவர் பரமு காணி கட்டிட தலைவர் சிவரட்ணராஜா தலைமையில் முன் எடுக்கப்பட்டது. காணி வாங்க மட்டும் அன்றைய ஆலய தலைவர் பரமு தனது இளைய மகனின் விபத்து காப்பீடு பணத்தில் ஒரு லட்சம் சுவிஸ் பிராங்க் பணத்தினை கடனாக UBS வங்கியில் வைப்பிலிட்டார். (அப்பணத்தில் 90,000 CHF இதுவரை மீள் கொடுப்பனவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

ஆறுமுகம் பரமு தலைவராக இருந்த காலத்தில் மேலும் அநேகமான பொதுமக்களின் பண பங்களிப்பினாலும் கடனுதவியாலும் அவர்களால் 2012 ம் ஆண்டு காணி வாங்கப்பட்டு ஆலயம் கட்டப்பட்டு 2015 ம் ஆண்டு 48 நாட்கள் கும்பாபிஷேகம் இடம்பெற்றது. இதன் பின்பு பரமுவிடம் இருந்து எப்படியாவது தலைவர் பதவியை பறிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சிவரட்ணராஜா ( கிளாக்கர் ) தலைமையில் சுவிஸ் பெண்மணி ஒருவரை கொண்டு வந்து பொதுச்சபை கூட்டத்தை நடாத்திய சிவரட்ணராஜா பரமுவின் பதவியை பறித்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல துரோகங்கள் ஆலயத்தில் இடம்பெற்று நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலமை ஏற்பட்டது நீதிமன்றம் சிவநாதன் ராஜ்க்குமார் (தீபன்) தலைமையிலான நிர்வாகம் 2022 நடாத்திய பொதுச்சபைக் கூட்டத்தில் செய்யப்பட்ட தில்லுமுல்லுகளால் மீண்டும் கூட்டம் நடாத்த வேண்டும் என நீதிமன்றம் கட்டளை பிறப்பித்து இருந்தது. அதன்படி 2023 மார்கழி மாதம் நீதிமன்ற தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

அதற்கு ஆலய தலைவர் பதவி ஆசை காரணமாக (தீபன்) சிவநாதன் ராஜ்க்குமார் அவர்களால் 150 பேருக்கும் அதிகமாக ஆலய பணத்தில் சந்தாப்பணம் கட்டப்பட்டு வாக்களிக்க solothun zurich neuchatel schwartzenburg thun Lausanne Bern Freiburg என பல மாநிலங்களில் இருந்து பேர்ண் முருகன் ஆலயத்தை தெரியாதவர்களை இறக்கி பதவியை கைப்பற்றினார் எனவும்,

ஆலய நிர்வாக தலைவர் தீபன் அவர்கள் நியாயமானதாகவும் நீதியாகவும் செயற்படவில்லை என்ற காரணத்தால் ஆலயம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு வளர்ந்து வந்த தற்போதைய இளைய சமூகத்தினர் அனைவரும் ஆலயத்தை விட்டு வெளியேறியுள்ளனர். எதிர்காலத்தில் ஆலயம் இளம் சமுதாயம் இல்லாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது எனவும்,

2012 ம் ஆண்டு முதல் இதுவரை ஒட்டுமொத்த ஆலய கணக்குகள் யாவும் buchaltung முன்னுக்கு பின் முரணாக இருந்து வருகிறது. தானே தான் ஆலய buchalter என கூறும் சிவரட்ணராஜா ( கிளாக்கர்) கணக்கு பரிசோதகர்களிடம் பரிசீலனை செய்ய கொடுக்கவில்லை என்பது உண்மை. அவர்கள் பல தடவை கேட்டதால் அவர்களை பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி வெளியேற்றம் செய்தார்கள். ஆலயத்தில் பணமோசடி இல்லாமல் இருந்தால் பொது மேற்பார்வையில் கணக்கை ஆய்வு செய்ய சிவரட்ணராஜா தயாரா எனவும் கேள்வி கேட்கிறோம்.

தொடர்ந்து ஆலய கணக்குகள் மறைக்கப்படுகிறது. காணி வாங்க, ஆலயம் கட்ட கடனாக கொடுத்த பலரின் பணம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. தற்போது அவையும் நீதிமன்றம் சென்று உள்ளது. தற்போது ஆலயத்தில் இடம்பெற்று வரும் பல சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் நீதிமன்றம் சென்று உள்ளது கவலை அளிக்கிறது எனவும்

ஆலய குருவின் மாதாந்த ஆலய சம்பளம் 5000.- CHF . இதன் ஆதாரம் பொதுச்சபை உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆலய வரவு செலவுக் கணக்குகளில் தலைவர் செயளாலர் பொருளாளர் கணக்கு பரிசோதகர்களின் கையொப்பம் எங்கே. யாப்பு திருத்தம் செய்யப்பட இருந்தால் அதன் மூலப்பிரதி அங்கத்தவர்களுக்கு ஏன் அனுப்பி வைக்கவில்லை. தொடர்ந்து பதவி ஆசை, பண ஆசை காரணமாக 70 வயதிற்கு மேற்பட்டும் இளம் சமுதாயத்திற்கு விட்டு கொடுக்க மறுப்பது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. பண மோசடி வெளியே வந்து விடும் என்ற அச்சம் என்பது எல்லோருக்கும் புரிகிறது எனவும்,

தற்போதைய ஆலய செயளாலர் தனக்கு எதுவும் தெரியாது என ஆலய அங்கத்தவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறிவருகிறார். அனைத்தும் ஆலய தலைவர் தீபன் காணி கட்டிட தலைவர் சிவரட்ணராஜா இருவரும் தன்னிச்சையாகவே முடிவு எடுத்து செயற்படுவதாக மன வேதனையுடன் கூறிவருகிறார் எனவும்,

ஊர் இரண்டு பட்டால் ஆலய குருவுக்கு கொண்டாட்டம் தானே. ஆலய குரு தானே அரசன் தானே மந்திரி எனவும் ஆலயத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் தகவல் எனப் *பலரும் தமது கருத்துக்களை எமது ஊடகத்துக்கு தெரிவித்து உள்ளனர்*.

ஆயினும் இதனை மறுதலிக்கும் ஆலயகுரு தரப்பை சேர்ந்த ஒருவர் ஆலய குருவுக்கு ஐயாயிரம் சம்பளமாகக் கொடுக்கிறோம் எனும் தகவல் பொய், அவருக்குரிய மருத்துவக் காப்பீடும் கட்டி, சுமார் 2500 சுவிஸ் பிராங்கே கொடுபடுகுது, அப்பணத்திலேயே அவர் தனது வீட்டு வாடகையும் கட்டி, அவரது மனைவி, பிள்ளைகளின் மருத்துவக் காப்பீடும் கட்டுகிறார், உண்மையில் அவருக்கு வருமானம் காணாது என மறுதலிக்கிறார்.

இதேவேளை ஆலய நிர்வாகத்தை சார்ந்து கருத்துத் தெரிவித்த ஒருவர் அது உண்மையாக இருக்கலாம், ஆனால் ஆலய குரு மாதம் எத்தனை ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் தட்ஷணையாகப் பெறுகிறார் என்பது தெரியாமல் எவரும் கருத்துக் கூறக் கூடாது, அது அவருக்கு கறுப்புப் பணமாக வரும் வருமானம் தானே அதனை ஆலய நிர்வாகம் கேட்டதா என்றார்.

இதேவேளை ஆலயத்தின் முன்னாள் கணக்காய்வாளர் போன்ற பல பொறுப்புக்களை வகித்த திரு.குணரெட்னம் என்பவர் மேற்படிக் கூட்டம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை ஆலயத்தின் பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் தபால் மூலம் அனுப்பியுள்ளார். (அதனையும் கீழே இணைத்துள்ளோம்.)

இதுபோன்ற சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய குளறுபடிகளை தீர்க்கும் வகையில் கருத்து சொன்ன சிலர் *ஆலய வளர்ச்சி காரணமாக சம்மந்தப்பட்ட அனைவரும் ஒரு மேசையில் இருந்து சமாதானமாக கதைத்து ஆலயத்தையும் மக்களின் சமய கலாச்சாரத்தையும் வளர்க்க வேண்டும் என்று கடைசியாக நாம் கேட்டுக்கொள்கின்றோம். தொடர்ந்து ஆலயம் பொலீஸ், நீதிமன்றம், அடிபிடி என இப்படியே சென்றால் எதிர் வரும் மாதங்களில் ஆலயம் சுவிஸ் மாநில அரசால் அபகரிக்கும் நிலை வரவுள்ளதனை தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்*. என்றனர்.

/ அதிரடி இணையத்துக்காக தீவகன் /

கணக்கு விபரத்திலும் பிழை

திரு.குணரெட்னம் என்பவர் மேற்படிக் கூட்டம் குறித்து விரிவான அறிக்கை

########################

You might also like

Leave A Reply

Your email address will not be published.