;
Athirady Tamil News

கனடா ஹரனின் இறுதிப் பயணத்தில், இல்லாதோருக்கு ஏற்ற உதவி வழங்கிய உறவினர்கள்.. (படங்கள், வீடியோ)

0

கனடா ஹரனின் இறுதிப் பயணத்தில், இல்லாதோருக்கு ஏற்ற உதவி வழங்கிய உறவினர்கள்.. (படங்கள், வீடியோ)
####################################

கனடாவில் பிறந்து கனடாவிலே வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் மரணித்த ஹரன் என செல்லமாக அழைக்கப்படும்ஆறுமுகம் மோகன் மதிகரன் அவர்களின் இறுதிப் பயணத்தில், “அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி” தாயக உறவுகளின் பசியினைப் போக்கிய, சுவிஸ் லுக்ஸ் அண்ணன் என அழைக்கப்படும் திரு.இலக்ஸ்மணன் அவர்களின் மகனும், அமரர்.ஹரனின் உடன்பிறவா சகோதரனுமாகிய திரு.லவன், தனது நிதிப்பங்களிப்பில் தாயக உறவுகளுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகளை அமரத்துவமடைந்த ஹரனின் இறுதி நிகழ்வு கனடா தேசத்தில் நடைபெறும் சமயத்தில், தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திள் ஊடாக வழங்கி வைத்தார்.

சுவிஸ் லுக்ஸ் அண்ணன் அவர்கள் தமிழ்த் தேசியத்தின்பால் அதீத ஈடுபாடு கொண்டவர், கல்விக்கழக செயற்பாட்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி தாயக கல்வி எழுச்சிக்கு சுவிஸில் தூணாக இருந்தவர் .அவரின் பெறாமகனான ஹரன் அவர்கள் கனடா தேசத்தில் பிறந்து வளர்ந்தவர். வாலிப வயதில் இறைவனடி சேந்திருக்கிறார். அண்மையில் கனடா நாட்டில் நடந்த மிக மோசமான வீதி விபத்தில் படுகாயமுற்ற நிலையில் அவர் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்துள்ளார்.

அமரர்.ஹரனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும், உறவுகளுக்கும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றதின்” ஆறுதலும், தேறுதலும் என்றுமே நிலைத்திருக்கும்.

அமரத்துவமடைந்த அமரர்.ஹரனுக்கு தாயக உறவுகள் சார்பில் இறுதி வணக்கத்துடன் கூடிய அஞ்சலிகளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தெரிவித்துக் கொள்கிறது.

இத்துயர காலச் சூழ்நிலையிலும் தாயக உறவுகளுக்கு மன்றத்தினூடாக உதவி செய்தமைக்காக நன்றி கூறுவதோடு மீண்டும் அமரர்.ஹரனுக்கு அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

09.12.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.