;
Athirady Tamil News

கிரீன்லாந்துக்கு அமெரிக்கா நிரந்தர பாதுகாப்பு

0

டென்மார்க்,

கிரீன்லாந்துக்கு அமெரிக்கா நிரந்த பாதுகாப்பு வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

டென்மார்க் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். இதற்கு டென்மார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் கிரீன்லாந்து தீவில் அமெரிக்க ராணுவம் இருப்பை வலுப்படுத்தி நிரந்தர பாதுகாப்பை அளிக்க டென்மார்க்குடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக டிரம்ப் அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

டென்மார்க்குடனான ஒப்பந்தம் கிரீன்லாந்தில் பாதுகாப்பு மற்றும் பிற அனைத்து தேவைகளின் மீதும் அமெரிக்காவிற்கு நிரந்தரக் கட்டுப்பாட்டை அளிக்கும். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தின்படி, கிரீன்லாந்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் அமெரிக்கா நிரந்தரமாக கவனித்துக் கொள்ளும்.

இது எங்களின் பல கவலைகள் அனைத்தையும் முழுமையாக நிவர்த்தி செய்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், கனிவளம் நிறைந்த டென்மார்க் பிரதேசத்தில் ஒரு பெரிய ராணுவ இருப்பை உருவாக்கும் செயல்முறையை எனது நிர்வாகம் உடனடியாக தொடங்கும் என்றார்.

மேலும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சனின் அலுவலகம் கூறும்போது, அமெரிக்காவுடனான கிரீன்லாந்து ஒப்பந்தம் 3 அரசாங்கங்களால் அடுத்த வாரம் கையெழுத்திடப்படும். இந்த ஒப்பந்தம் கிரீன்லாந்து – டென்மார்க்கின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அங்கீகரிக்கும் என்று தெரிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.