;
Athirady Tamil News

கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா; சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை​

0

கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை​ விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை, கேகாலை மாவட்டத்தின் தெஹிஓவிட்ட, அரநாயக்க, தெரணியகல, மாவனல்ல, யட்டியாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, அம்பகமுவ, நோர்வுட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மண்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.