;
Athirady Tamil News

வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் 4-வது வாரமாகத் தொடர்ச்சி!

0
இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளான் மக்கள் இன்று நான்காவது வாரமாகவும் தமது போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமது பூர்வீக நிலங்களை இழந்த மக்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய அரசாங்கம் பொது மக்களின் காணிகள் பொதுமக்களுக்கே வழங்கப்படும் என வாக்குறுதிகளை வழங்கிய போதும் இதுவரை அவ்வித நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர்.
தற்போது அனுமதி இன்றி மிகப்பெரிய அளவில் இராணுவத்தின் வைத்தியசாலை அமைக்கப்பட்டு வருவதாகவும் அது பொது மக்களின் கானில் அமைக்கப்பட்டு வருவது என்றும் தெரிவித்தனர்.
தமது காணியில் விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மக்கள் குறிப்பட்டனர்
.
You might also like

Leave A Reply

Your email address will not be published.