;
Athirady Tamil News

“நிஷாங்கன், சாத்விகா” திருமண நிகழ்வு தாயகத்தில் விசேட மதிய உணவுடன் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)

0

“நிஷாங்கன், சாத்விகா” திருமண நிகழ்வு தாயகத்தில் விசேட மதிய உணவுடன் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)
#########################

சுவிஸில் இன்றைய நாளில் திருமண பந்தத்தில் இணையும் “நிஷாங்கன், சாத்விகா” தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தாயக கிராமமொன்றில் கொண்டாடப்பட்டது.

உரும்பிராய் மற்றும் தெல்லிப்பளையைச் சேர்ந்தவர்களும் ஜெர்மனி நூரெம்பேர்க் பிரதேசத்தில் வசிப்பவர்களான திரு.திருமதி. ராஜ்மோகன் சொரூபா தம்பதிகளின் அன்புப்புதல்வன் செல்வன் நிசாங்கனுக்கும் புங்குடுதீவு பதினோராம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் தூண் மாநிலத்தில் வசிப்பவர்களுமான திரு.திருமதி. பாபு கலைச்செல்வி தம்பதிகளின் அன்புப்புதல்வி செல்வி.சாத்விகாவுக்கும் இன்றையதினம் சுவிஸில் நடைபெறும் திருமணத்தை முன்னிட்டு “நிஷாங்கன், சாத்விகா” தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் திருமண விருந்துபசார நிகழ்வு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் வன்னிக் கிராமத்தில் நடைபெற்றது.

மிகவும் பின்தங்கிய கிராமத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட திருமண மதிய அசைவ விருந்துணவு நிகழ்வில் அநேக கிராம மக்கள், சிறுவர், சிறுமியர்கள் என பலரும் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளை ஆசீர்வதித்து வாழ்த்திச் சென்றனர்.

அதிகாலை வேளையிலே மழை பெய்யத் தொடங்கிய போதிலும் இடையிடையே வானம் இருட்டி விடாது மழை பெய்த போதிலும் “” திருமண விருந்துபசார நிகழ்வுக்கு பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்தனர்.

நிஷாங்கன், சாத்விகா தம்பதிகளின் திருமண நாளில் அவர்களின் நிதிப்பங்களிப்பில் முதலில் திருமண கேக் வெட்டப்பட்டு, தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன் கிராம மக்களுக்கான திருமண விருந்துபசார நிகழ்வும் நிஷாங்கன், சாத்விகா தம்பதிகளின் விருப்பத்துக்கு இணங்க கோழி இறைச்சியுடனான விசேட அசைவ மதிய உணவும் விசேடமாக ஒழுங்குபடுத்தி நடைமுறை படுத்தப்பட்டது.

மேற்படி நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரும் சமூக சேவையாளருமான திருமதி பவளராணி நவரெட்ணம் அவர்களின் ஒழுங்கமைப்பில் சமுர்த்தி தலைவர் திரு.திருமதி. சிவகுமார் ஜெகதேவி, ஆசிரியை திருமதி.மதிவதனி, சமுர்த்தி செயலாளர் திருமதி.செல்வராணி ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய நாளில் திருமாங்கல்ய பந்தத்தில் இணையும் புதுமணத் தம்பதிகளை தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறது.. அதேவேளை திரு.திருமதி நிஷாங்கன், சாத்விகா தம்பதிகளின், திருமண நாளினை முன்னிட்டு விசேட அசைவ மதிய உணவினை தாயக உறவுகளுக்கு வழங்க நிதிப் பங்களிப்பினை வழங்கிய நிஷாங்கன், சாத்விகா தம்பதிகளுக்கும் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

03.09.2023

“நிஷாங்கன், சாத்விகா” திருமண நிகழ்வு தாயகத்தில் விசேட மதிய உணவுடன் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.