;
Athirady Tamil News

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ, படங்கள்)

0

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)
##############################

யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்டவரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இயக்குனர் சபை உறுப்பினரும், சுவிஸ் தூண் மாநிலத்தில் வசிப்பவரும், சிறந்த முருகனடியாருமான ராஜூ என எல்லோராலும் அழைக்கப்படும் திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. குறிப்பாக கிராம மக்களுக்கு உதவுமாறு திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் கேட்டதுக்கு இணங்க, இந்நிகழ்வானது உடனடி ஏற்பாட்டில் நடைபெற்றது.

மேற்படி இன்றைய நிகழ்வானது மாணிக்கதாசன் நற்பணி மன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.பவளராணி நவரெட்ணம் அவர்களிடம் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” கேட்டுக் கொண்டதுக்கு இணங்க, உடனடியாக அவரினால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.

அந்த வகையில் இன்றைய தினம் வவுனியா எல்லைக் கிராமத்தில் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள், அக்கிராம பொதுமக்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டு திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் பங்கு கொண்டனர்.

இவர் “மாணிக்கதாசன் நற்பணிமன்ற” நிர்வாகசபை உறுப்பினர் என்பதினால், மன்றத்தின் நிர்வாகத்தின் நிதிப் பங்களிப்பில், பிறந்தநாள் கேக் வெட்டி, வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்கள் சிறியோர் முதல், பெரியோர் வரை ராஜு எனும் திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும்முகமாக பிறந்தநாள் கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி தமது பிறந்த நாள் வாழ்த்தினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொண்டனர்.

இதேவேளை ராஜூ என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது குடும்பத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதுடன், பெறுமதியான உலருணவுப் பொதிகளும், அக்கிராம மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களுக்கு நிகழ்வில் கலந்து கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரையான தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு அவர் மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் சமூக நற்பணிகளுக்காக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இதேவேளை திரு.தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தாயக உறவுகளுக்கு வழங்கிய வாழ்வாதார உதவிகளுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய திரு. தர்மலிங்கம் சுபாஸ்கரன் குடும்பத்தினருக்கு இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரையான தாயக உறவுகளுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
28.01.2024

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு உலருணவுப் பொதிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.