;
Athirady Tamil News

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு,, -படங்கள் வீடியோ-

0

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு,, -படங்கள் வீடியோ-

மக்கள் எழுச்சியில் “மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்” பிறந்ததினத்தில் தாயகத்தில் நினைவு கூறல்….
####################

ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், மாபெரும் மக்கள் சேனையான புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஸ்தாபகரும், அதன் செயலதிபருமான மக்கள் போராட்டத்தின் மாபெரும் தளபதியான தோழர் முகுந்தன் என அறியப்பட்ட அமரர் கதிர்காமர உமாமகேஸ்வரன் அவர்களது எழுபத்தொன்பதாவது பிறந்தநாள் நினைவு தாயகத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் “புலம்பெயர் புளொட் தோழர்கள்” சிலரின் நிதிப் பங்களிப்பில், விசேட மதியஉணவு வழங்கிக் கொண்டாடப்பட்டது.

வவுனியா கிராமமொன்றில் அமரர் தோழர்.உமாமகேஸ்வரன் அவர்களது எழுபடத்தொன்பதாவது பிறந்ததினம் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி பாவலராணி நவரெட்ணம் அவர்களது மேற்பார்வையில்
வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் தேவார பாராயணம் பாடப்பட்டு மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைவருக்குமான ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்கள் சிறியோர் முதல், பெரியோர் வரை தோழர்.முகுந்தன் எனும் செயலதிபர் உமாமகேஸ்வரன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும்முகமாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி “அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி” தமது பிறந்தநாள் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பின்னர் விசேட மத்திய உணவு வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வுக்கு மேற்படி “கல்விக்கு கரம் கொடுப்போம் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டத்துக்கும், நிகழ்வுகளுக்கும் நிதிப் பங்களிக்க உள்ளோர் விபரம் கழகத்தின் (புளொட்) பிரான்ஸ் கிளை சார்பில் பிரான்ஸ் மத்தியகுழு உறுப்பினர் தோழர்.ரங்கா, கிளைப் பொறுப்பாளர் தோழர்.சுகுமார், கிளையின் செயலாளர் தோழர்.தயாளன், கிளையின் நிதிப் பொறுப்பாளர் தோழர்.ஜெயந்தன் மற்றும் பிரான்ஸ் கிளைத் தோழர்களான சுதா, கேதீஸ், மட்டக்களப்பு தயா, சசி மற்றும் பிரித்தானியா மத்தியகுழு உறுப்பினர் தோழர்.அல்வின், பிரித்தானியா தோழர்.பாலா அண்ணர், கனடா தோழர் ஸ்ரீ எனும் கோபு, கழகத்தின் அமெரிக்கா கிளைப் பொறுப்பாளர் தோழர்.கோபி, சுவிஸ் தோழர்களான லெனின் எனும் செல்வபாலன், அன்ரன் எனும் லோகராஜா, ரமணன், பாபு எனும் சித்திரவேல், தேவண்ணர் எனும் தவராஜா, பிரபா எனும் கருணாகரன், ராசன், புவி, ரூபன் எனும் குமார், குழந்தை எனும் கைலாசநாதன், குணா ஆயினும் குணசீலன், போன்றோர் தங்களின் நிதிப் பங்களிப்பை வழங்கி இச்செயற்பாட்டுக்கு உதவி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது “கல்விக்கு கரம் கொடுப்போம், மற்றும் உதவி வழங்கல்” திட்டமானது, இவ்வாறாக காலத்தின் தேவை கருதி உடனடியாக இந்த உதவியினை செய்ய முன் வந்த புலம்பெயர் புளொட் தோழர்களுக்கு, தாயகத்தின் உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றி கூறுவதோடு,

இன்றைய நாளில் ஜனன தினத்தை காணும் அமரர்.உமாமகேஸ்வரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என தாயக உறவுகளோடு, இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாயார வேண்டி பெருமை கொள்கிறது..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
18.02.2023

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட மதிய உணவு வழங்கும் நிகழ்வு,, -வீடியோ-

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.