;
Athirady Tamil News

காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்க உத்தரவு

0

பெங்களூரு/புதுடெல்லி: காவிரி​யில் இருந்து தமி​ழ​கத்​துக்கு 15 நாட்​களுக்கு தின​மும் 12 ஆயிரம் கன அடி நீரை கர்​நாடக அரசு திறந்​து​விட வேண்​டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்​ளது.

கடந்த‌ ஜூலை 28-ம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழுக் கூட்​டத்​தில் தமி​ழ​கத்​துக்கு 15 நாட்​களுக்கு தின​மும் 3,500 கன அடி நீரை திறந்​து​விட கர்​நாடகா​வுக்கு உத்​தர​விடப்​பட்​டது. ஆனால், தமிழகத்துக்கு நீர் திறக்​கப்​பட​வில்​லை.

இந்​தச் சூழ்​நிலை​யில் காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழுக் கூட்​டத்​தின் 140-வது கூட்​டம் டெல்​லி​யில் அதன் தலை​வர் வினீத் குப்தா தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் கர்​நாட​கா, தமிழ்​நாடு, கேரளா, புதுச்​சேரி மாநிலங்​களைச் சேர்ந்த நீர்ப்​பாசனத் துறை அதி​காரி​கள் பங்​கேற்​ற​னர்.

தமிழக அரசின் தரப்​பில், “உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்​பின்​படி கர்​நாடக அரசு காவிரி​யில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்​களில் தமி​ழ​கத்​துக்கு வழங்க வேண்​டிய நீரை மாத​வாரி​யாக முறை​யாக வழங்​க​வில்​லை.

இதனால் மேட்​டூர் அணை​யில் பாசனத்​துக்​காகத் திறக்​கும் அளவுக்கு நீர் இருப்பு இல்​லை. ஆகஸ்ட் மாத தொடக்​க‌த்​தில் இருந்தே காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் கனமழை பெய்கிறது. எனவே கர்​நாடக அரசு தமி​ழ​கத்​துக்கு வழங்க வேண்​டிய நிலுவை நீரை திறந்​து​விட உத்​தர​விட வேண்​டும்” என்று வலி​யுறுத்​தப்​பட்​டது.

கர்​நாடகா மறுப்பு: அதற்கு கர்​நாடக அரசின் தரப்​பில், “கர்​நாட​கா​வில் நிகழாண்​டில் தென்​மேற்கு பருவ மழை பொய்த்​த​தால் கிருஷ்ண​ராஜ சாகர், கபினி, ஹாரங்​கி, ஹேமாவதி ஆகிய அணை​களுக்கு போதிய நீர் வரவில்​லை. கடந்த இரு வாரங்​களாகக் கணிச​மாக மழை பொழிந்​த​தால் கபினி, ஹாரங்கி ஆகிய அணை​கள் முழு கொள்​ளளவை நெருங்​கி​யுள்​ளன.

தற்​போது கிருஷ்ண​ராஜ சாகர், கபினி உள்​ளிட்ட 4 அணை​களி​லும் சேர்த்து 77.746 டிஎம்சி நீர் இருப்​பில் உள்​ளது. இந்த அளவானது கடந்த 30 ஆண்​டு​களில் இருந்த நீரின் அளவை​விட 47 சதவீதம் குறை​வானது. இந்த நிலை​யில் தமி​ழ​கத்​துக்கு நிலுவை நீரை முழு​வது​மாக திறக்க இயலாது” என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இதனை ஏற்க மறுத்த காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழுத் தலை​வர், “உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தர​வின்​படி தமி​ழ​கத்​துக்​குக் காவிரி நீரை திறந்​து​

விட கர்​நாடகா முன்வர வேண்​டும். தமி​ழ​கத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு தின​மும் 12 ஆயிரம் கன அடி நீரை திறந்​து​விட வேண்​டும். இதனை ஆகஸ்ட் 13-ம் தேதி காலை 8 மணி முதல் இரு மாநில எல்​லை​யான பிலிகுண்​டுலு அளவீட்டு நிலை​யத்​தில் இருந்து தமி​ழ​கத்​துக்கு நீர் செல்​வதை உறுதி செய்ய வேண்​டும்” என்று பரிந்துரைத்தார்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், அதன் தலைவர் ஹல்தார் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. அப்போது, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.