;
Athirady Tamil News

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (படங்கள் & வீடியோ)

0

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (படங்கள் & வீடியோ)
#################################

ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் உள்ளங்கள் வரிசையில் பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்சில் வசிக்கும் செல்வி கௌசி சஸ்பாநிதி அவர்கள்.

புங்குடுதீவு வழித்தோன்றலாய் லண்டனில் வாழ்ந்து அமரத்துவமடைந்த அமரர்களான சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் இரண்டாவது மகள் ஜெயா என அழைக்கப்படும் பிரான்சில் வசிக்கும் திரு திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி தம்பதிகளின் செல்வப் புதல்வி கௌசி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வன்னிக் கிராமமொன்றில் கொண்டாடினார்.

வழமைபோலவே தனது பிறந்தநாளில் உதவி வழங்குவதோடு மற்றவர்களை மகிழ்ச்சியடைய வைத்து மகிழும் உள்ளமான செல்வி.கௌசி சஸ்பாநிதி அவர்கள், எப்போதும் போலவே இம்முறை மாலைநேர வகுப்புக்கு செல்லும் மாணவமாணவிகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்குமாறு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டு தனது நிதிப் பங்களிப்பை தந்துள்ளார்..

செல்வி கௌசி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கமைய செல்வி கௌசியின் பிறந்தநாளான இன்று வன்னி எல்லைக் கிராமமொன்றில் அப்பிரதேச மாணவமாணவிகள் சிலரும் அவரது பெற்றோர்களும் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டி, வாழ்த்துப் பாடி சந்தோஷமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வானது, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் செல்வி கௌசி சஸ்பாநிதி அவர்களது நிதிப் பங்களிப்பில் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

பிரான்சில் வசிக்கும் கௌசி அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு வவுனியா செக்கட்டிபுலவு அறநெறி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக மாணவ சிறார்களும், பெற்றோர்கள் கலந்து கொண்டு பிரான்சில் வசிக்கும் கௌசி அவர்களின் சார்பாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

வவுனியா செக்கட்டிபுலவு அறநெறி ஆசிரியர் கதிரேசு சுபாஜினி அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க சமூக சேவையாளரும், ஊடகவியலாளருமான திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைப்பில் அறநெறி ஆசிரியர் திருமதி. கதிரேசு சுபாஜினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இன்றைய நாளில் தாயக உறவுகளான சிறுவர் சிறுமியர்களோடு பிறந்த நாள் பாட்டுப்பாடி கேக் வெட்டி மற்றவர்களை மகிழ வைத்து தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய செல்வி கௌசி இன்றைய நாளில் பிரான்சில் இருந்தும், வன்னிக் கிராமத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வி கௌசி சஸ்பாநிதி அவர்கள் சகல கலையும் கற்று தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி எல்லா வளமும் பெற்று சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்தும் அதேவேளை,

தனது பிறந்த நாளை முன்னிட்டு தாயக உறவுகளுக்கு கற்றல் உபகாரணமாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைத்தமைக்காகவும், மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
24.06.2025

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் பிரான்ஸ் கௌசி (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.