;
Athirady Tamil News

கல்வியலாளர்களுக்கு மகுடம் சூட்டிய “மரகதங்கள் சீசன் த்ரி” நிகழ்வுகள்

0
video link-

அல்-மீஸான் பௌண்டஷனின் “மரகதங்கள் சீசன் த்ரி” நிகழ்வுகள் கல்முனை அல்- அஸ்ஹர் அரங்கில் அல்-மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளருமான நூருல் ஹுதா உமர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை கல்வியியலாளர் சேவைக்கு உள்வாங்கப்பட்டவர்களையும், கல்வியலாளர்களையும், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களையும், பிபா சர்வதேச நடுவராக தெரிவு செய்யப்பட்ட ஏ.எம். ஜப்ரான் அவர்களையும் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் நட்சத்திர அதிதியாக மாற்றத்துக்கான சர்வதேச பங்காளிகள் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்த்திட்ட ஆலோசகரும், அல்-மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஆளுநர் சபை உறுப்பினருமான இப்திகார் றிசாத் செரீப் , கௌரவ அதிதிகளாக பிரதிக்கல்வி பணிப்பாளர்களான பி. ஜிஹானா ஆலீப், எம்.என்.ஏ. மலிக், எம்.எல்.எம். முத்தரிஸ், யூ.எல்.சாஜித், யூ.எல். றியால், அஸ்மா அப்துல் மலிக், ஏ. சஞ்சீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் விசேட அதிதிகளாக சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் எஸ்.எல். றியாஸ், பொறியியலாளர் கமால் நிஷாத், ஆசிரிய ஆலோசகர்கள், கல்விமான்கள், கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், அல்-மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஆளுநர் சபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.