புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட பெருக்குமர சுற்றாடலை அழகுபடுத்திய *தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும* மயூரன்.. (முழுமையான படங்கள், வீடியோ)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட பெருக்குமர சுற்றாடலை அழகுபடுத்திய *தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும* மயூரன்.. (முழுமையான படங்கள், வீடியோ)
சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் வரலாற்று சிறப்புமிகு இலங்கை மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றும் புங்குடுதீவின் பெருமைமிகு சுற்றுலாத் தளமுமான “புங்குடுதீவு பெருக்குமரம், மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரைச் சூழல்” புங்குடுதீவு சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஓன்றியத்தினரால் அவற்றுக்குரிய வகையில் அமைத்துக் கொடுத்து இருந்தனர்.
“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் முன்னெடுக்கப்பட்ட இலங்கையின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய புங்குடுதீவின் பெருமைகளில் ஒன்றான “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல், மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேசமும் அழகுபடுத்தப்பட்டு அதாவது “வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும், இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்களையும் சுற்றுலாப் பயணிகளாக புங்குடுதீவுக்கு ஈர்க்கும் வகையில்”
“பெருக்குமரத்தை சுற்றி கட்டுக்கட்டி புல்கள் பதிக்கப்பட்டதுடன், நடைபாதைகள், கல்லிலான இருக்கைகள், ஆண்,பெண்களுக்கென மலசல கூடங்கள், கிணறு, தண்ணீர் தொட்டி, கடற்கரைக்கான நடைபாதை ஆகியவற்றுடன் சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல்” போன்றவை அமைக்கப்பட்டதுடன்.. கடந்த ஆறு வருடத்துக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக யாழ். தொல்லியல் திணைக்களம் ஊடாக மக்களின் பாவனைக்கு ஒப்படைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.
இதனைக் கடந்த வருடம் சுவிஸ் ஒன்றியத்தின் மிகுதியாக இருந்த நிதியிலும், கனடா சங்க இப்போதைய செயலாளர் திரு தீபன் குணபாலசிங்கம் அவர்களின் நிதியிலும், அவரது நேரடி மேற்பார்வையிலும் மேலும் சில திட்டங்கள் பெருக்குமர சுற்றாடலில் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்றும் இன்றுமாக ஊர்ப்பற்றாளன் திரு.பரமலிங்கம் மயூரன் அவர்களின் முயற்சியினால் மேற்படி பெருக்குமரம், அதனை ஒட்டிய கடற்கரை சூழலும் சிரமதானப்பணி மூலம் அழகுபடுத்தினார்.
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை தாயின் பிறப்பிடமாகவும், கிழக்கூரை தந்தையின் பிறப்பிடமாகவும் புங்குடுதீவு கிழக்கூரில் வாழ்ந்து இப்போது லண்டனில் வதியும் ஊர்ப்பற்றாளன் திரு.பரமலிங்கம் மயூரன் அவர்களின் முயற்சியினாலும், அவரது நிதிப் பங்களிப்பிலும் மேற்படி மீண்டும் குப்பைகூளங்கள், கற்கள் அகற்றப்பட்டதுடன், அழகுபடுத்தப்பட்டு புனரமைக்கப்பட்டது.
புங்குடுதீவு பெருக்குமரச் சூழலை தொடர்ந்தும் பராமரிக்கும் நோக்குடனும், அழகுபடுத்தும் நோக்குடனும் மேற்படி திரு.பரமலிங்கம் மயூரன் அவர்களின் முயற்சியினாலும், அவரது நிதி பங்களிப்பிலும் இன்றையதினம் (இன்று 08/07/2025) சிரமதானப் பணி மூலம் பெருக்குமர சுற்றாடலை அழகுபடுத்தினர், இதேவேளை பெருக்குமர சுற்றாடலில் வாழ்வோர் மற்றும் அவ்வட்டார மக்கள் தாமாக முன்வந்து சிரமதானம் மூலம் இதனைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டுமென புலம்பெயர் புங்குடுதீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை தீர்ப்பாயம் வாட்ஸாப் குழுமத்தில் உள்ளவர்களில் ஒருவரான சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முன்னாள் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று திரு.பரமலிங்கம் மயூரன் அவர்கள் இதனை நேற்றுமுன்தினம் நிறைவேற்றி உள்ளார்.
திரு.பரமலிங்கம் மயூரன் ஊர் சார்ந்து பல நல்ல சேவைகளை நீண்டகாலமாக செய்து வரும் ஊர்ப்பற்றாளன். அவருக்கும், இதுக்காக பாடுபட்ட அனைவருக்கும், உலகெங்கும் உள்ள புங்குடுதீவு மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
மக்கள் சேவையே மகேசன் சேவை..