“கற்றல் உபகரணங்கள்” உதவியுடன், புங்குடுதீவு, கனடா ராகவியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)
“கற்றல் உபகரணங்கள்” உதவியுடன், புங்குடுதீவு, கனடா ராகவியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)
#########################
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் உள்ளங்கள் வரிசையில் பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடாவில் வசிக்கும் திருமதி.ராகவி கிரேக் அவர்கள்.
புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், லண்டனில் வாழ்ந்து அமரத்துவமடைந்த கொழும்பு மருதானை பிரபல வர்த்தகருமான சொக்கர் மற்றும் நாகேஷ் என அன்புடன் அழைக்கப்படும் அமரர்களான சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வி வசந்தா என அன்புடன் அழைக்கப்படும் கனடாவில் வசிக்கும் திரு திருமதி ரவி பிரேமகுமாரி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், திரு.கிரேக் அவர்களின் அன்பு மனைவியுமான திருமதி ராகவி கிரேக் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வன்னிக் கிராமமொன்றில் கொண்டாடினார்.
வழமைபோலவே தனது பிறந்தநாளில் உதவி வழங்குவதோடு மற்றவர்களை மகிழ்ச்சியடைய வைத்து மகிழும் உள்ளமான திருமதி ராகவி கிரேக் அவர்கள், எப்போதும் போலவே மக்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் நல்நோக்கில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டு தனது நிதிப் பங்களிப்பை தந்துள்ளார்..
கனடாவில் வாழ்ந்து இப்போது பிரான்சில் வசிக்கும் திருமதி.ராகவி கிரேக் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் மக்களுக்கு இன்றைய அவசிய தேவையான கல்விக்கு கரம் கொடுப்போம் திடடத்தின் கீழ் உதவிகள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருமதி.ராகவி கிரேக் அவர்களின் பிறந்ததினக் கொண்டாட்டம், அவரது உறவுகளின் வாழ்த்துக்களுடன் வவுனியாவில் உள்ள கிராமம் ஒன்றில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வவுனியா பிரதேசத்தில் மாணவ,மாணவிகளுடன் அவர்களது பெற்றோர்கள் எனப் பலரும் ஒன்றுகூடி இவரது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக்வெட்டி கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
பிரான்சில் வசிக்கும் ராகவி அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு வவுனியா பம்பைமடு கிராம பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
முதல் நிகழ்வாக மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டு பிரான்சில் வசிக்கும் ராகவி அவர்களின் சார்பாக மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
வவுனியா கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவபாலன் கஜேந்திரன் வேண்டுகோளுக்கு இணங்க சமூக சேவையாளரும், ஊடகவியலாளருமான திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைப்பில் ஆசிரியர் திருமதி. குமரன் காயேத்திரி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
அமரர்களான சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையினர் தங்களது குடும்பத்தின் எந்தவிதமான நிகழ்வு என்றாலும் அந்நிகழ்வினை தாயக உறவுகளோடு இணைந்து கொண்டாடி உதவி செய்து வருபவர்கள் என்பதை கட்டாயம் சொல்ல வேண்டும். அதுவும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக இவர்கள் பல்வேறு வாழ்வாதார உதவிகள் மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற நிகழ்ச்சி திட்டத்தினூடாக தொடர்ச்சியாக உதவி செய்து வருவது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இவருக்கும் தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப் பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி மன்றம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
12.09 2025
“கற்றல் உபகரணங்கள்” உதவியுடன், புங்குடுதீவு, கனடா ராகவியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (வீடியோ)






































“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos