;
Athirady Tamil News

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட பெருக்குமர சுற்றாடலில் பயன்தரு நிழல் மரங்களை நாட்டி அழகுபடுத்திய தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும மயூரன், கனடா சங்க செயலாளர் தீபன்TRM.. (முழுமையான படங்கள், வீடியோ)

0

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட பெருக்குமர சுற்றாடலில் பயன்தரு நிழல் மரங்களை நாட்டி அழகுபடுத்திய தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும மயூரன், கனடா சங்க செயலாளர் தீபன்TRM.. (முழுமையான படங்கள், வீடியோ)

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் வரலாற்று சிறப்புமிகு இலங்கை மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றும் புங்குடுதீவின் பெருமைமிகு சுற்றுலாத் தளமுமான “புங்குடுதீவு பெருக்குமரம், மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரைச் சூழல்” புங்குடுதீவு சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஓன்றியத்தினரால் அவற்றுக்குரிய வகையில் அமைத்துக் கொடுத்து இருந்தனர்.

“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் முன்னெடுக்கப்பட்ட இலங்கையின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய புங்குடுதீவின் பெருமைகளில் ஒன்றான “புங்குடுதீவு பெருக்குமரம்” சுற்றாடல், மற்றும் அதனையொட்டிய கடற்கரைப் பிரதேசமும் அழகுபடுத்தப்பட்டு அதாவது “வெளிநாட்டு உல்லாசப் பயணிகளையும், இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்களையும் சுற்றுலாப் பயணிகளாக புங்குடுதீவுக்கு ஈர்க்கும் வகையில்”

“பெருக்குமரத்தை சுற்றி கட்டுக்கட்டி புல்கள் பதிக்கப்பட்டதுடன், நடைபாதைகள், கல்லிலான இருக்கைகள், ஆண்,பெண்களுக்கென மலசல கூடங்கள், கிணறு, தண்ணீர் தொட்டி, கடற்கரைக்கான நடைபாதை ஆகியவற்றுடன் சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடல்” போன்றவை அமைக்கப்பட்டதுடன்.. கடந்த ஆறு வருடத்துக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக யாழ். தொல்லியல் திணைக்களம் ஊடாக மக்களின் பாவனைக்கு ஒப்படைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

இதனைக் கடந்த வருடம் சுவிஸ் ஒன்றியத்தின் மிகுதியாக இருந்த நிதியிலும், புங்குடுதீவு பழைய மாணவர் கனடா சங்க இப்போதைய செயலாளர் திரு தீபன் குணபாலசிங்கம் அவர்களின் நிதியிலும், அவரது நேரடி மேற்பார்வையிலும் மேலும் சில திட்டங்கள் பெருக்குமர சுற்றாடலில் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மூன்று மாதத்துக்கு முன்னர், ஊர்ப்பற்றாளனும் தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும உறுப்பினருமான திரு.பரமலிங்கம் மயூரன் அவர்களின் முயற்சியினால் மேற்படி பெருக்குமரம், அதனை ஒட்டிய கடற்கரை சூழலும் சிரமதானப்பணி மூலம் அழகுபடுத்தினார். லண்டனில் வதியும் ஊர்ப்பற்றாளன் திரு.பரமலிங்கம் மயூரன் அவர்களின் முயற்சியினாலும், அவரது நிதிப் பங்களிப்பிலும் மேற்படி மீண்டும் குப்பைகூளங்கள், கற்கள் அகற்றப்பட்டதுடன், அழகுபடுத்தப்பட்டு புனரமைக்கப்பட்டது.

இதனைத் தொடந்து கடந்தமாதம் புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடலில் நிழல் தரும் பயனுள்ள மரங்களான ஆலமரம், புங்கைமரம், மலைவேம்பு, மருதமரம் போன்ற மரங்கள் நடப்பட்டதுடன், பெருக்குமர மலசல கூடங்களுக்கான தண்ணீர் தேவையை முன்னிட்டு கிணற்றுக்கு பக்கத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை புதிய வடிவில் உயர்த்தியும் வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பாயம் குழுமத்தின் உறுப்பினரும், லண்டனில் வசிப்பவருமான தம்பி மயூரன் பரமலிங்கம் நேரடியாக ஊருக்கு போய் இச்செயல்பாடுகளை செய்து முடித்துள்ளார்.

இதுக்கான நிதி உதவியை சுவிஸில் வதியும் திரு.திருமதி தயாபரன் வசந்தி குடும்பம், திரு.திருமதி. செல்வம் வதனி குடும்பம், திரு.திருமதி சுதாகரன் செல்வி குடும்பமும், ஆகியோருடன் தீர்ப்பாயம் குழும தம்பி மயூரன் குடும்பமும் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இவ்வாரம் பலத்த மழைக்கு மத்தியில் இரவுபகலாக வேலை செய்து மேலும் பல நிழல்தரும் பயனுள்ள பல்வேறு மரங்கள் நடப்பட்டது. இதன் முதல் நிகழ்வாக இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு அதில் இருந்த பாறாங்கற்கள் அகற்றப்பட்டு பயன்தரு மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், அதனைச்சுற்றி பாதுகாப்புக்காக மட்டைகளால் அடைக்கப்பட்டது.

இதேவேளை இதன்போது புங்குடுதீவு பெருக்குமர சூழலில் மரநடுகை நடைபெற்ற போது இன்று நேரடியாக விஜயம் செய்த இலங்கை அரச தொல்லியல் திணைக்களத்தின் யாழ்.தீவக மண்டல அதிகாரிகளில் ஒருவரான திருமதி. செல்வகுமார் ரோகினி அவர்கள் இச்செயல்பாடுகளை வாழ்த்தியதுடன், தனது கைகளாலும் மரத்தை நட்டு அகமகிழ்ந்தார்.

இன்றைய பல்வேறு பயன்தரும் மரநடுகைக்கான செயல்பாட்டுக்கு நாம் கேட்டதும் புங்குடுதீவு கனடா பழைய மாணவர் சங்க செயலாளரும், புங்குடுதீவுக்கு நற்சேவை செய்வதே தமது நோக்கம் எனவும் வாழ்ந்து வரும் தந்தை ஊரைதீவை சேர்ந்த குணபாலசிங்கம், தாய் கிழக்கூரை சேர்ந்தவருமான புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மகனான திரு TRM தீபன் அவர்களும், புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை தாயின் பிறப்பிடமாகவும், கிழக்கூரை தந்தையின் பிறப்பிடமாகவும் புங்குடுதீவு கிழக்கூரில் வாழ்ந்து இப்போது லண்டனில் வதியும் ஊர்ப்பற்றாளன் திரு.பரமலிங்கம் மயூரன் அவர்களும் இணைந்து நிதிப் பங்களிப்பு வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை மேற்படி மரங்களுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பொறுப்பை மேற்படி பெருக்குமரத்துக்கு முன்னாள் உள்ள *கல்லடி அம்மன் கோயில் எனும் ஸ்ரீ நாகபுவனேஸ்வரி அம்மன் ஆலய* தர்மகர்த்தாவும், சமய,சமூக சேவையாளருமான *தேவி அம்மா*எனும் திரு.திருமதி அமிர்தலிங்கம் சச்சிதானந்ததேவி அவர்கள் பொறுப்பேற்று தூர இடத்தில் இருந்து வாகனம் மூலம் நல்ல தண்ணீர் கொண்டு வந்து பராமரிப்பு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தீர்ப்பாயம் வாட்ஸாப் குழுமத்தில் உள்ளவர்களில் ஒருவரான சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முன்னாள் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று திரு.பரமலிங்கம் மயூரன் அவர்கள் இதனை நிறைவேற்றி உள்ளார்.

திரு.பரமலிங்கம் மயூரன் ஊர் சார்ந்து பல நல்ல சேவைகளை நீண்டகாலமாக செய்து வரும் ஊர்ப்பற்றாளன் அவருக்கும், புங்குடுதீவு கனடா பழைய மாணவர் சங்க செயலாளர் திரு TRM தீபன் அவர்களுக்கும், இதுக்காக பாடுபட்ட அனைவருக்கும், அதேபோல் இச்செயல்பாட்டுக்கு முன்பு நிதி உதவி அளித்தோருக்கும், இதனை பராமரிக்கும் தேவி அம்மா குடும்பத்தினருக்கும் *உலகெங்கும் உள்ள புங்குடுதீவு மக்கள்* தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மக்கள் சேவையே மகேசன் சேவை..

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட பெருக்குமர சுற்றாடலில் மேலும் பயன்தரு நிழல் மரங்களை நாட்டி அழகுபடுத்திய தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும மயூரன், கனடா சங்க செயலாளர் தீபன்TRM.. (வீடியோ)

*மீள் புனரமைப்பின் பின்னர் மக்களின் பாவனைக்காக இலங்கையில் குறிப்பாக புங்குடுதீவில் வரலாற்று சிறப்புமிக்க *பெருமைமிகு பெருக்குமரம்* பார்வையிடும் நிகழ்வு..
புங்குடுதீவின் சொத்தைக்காக்க🇨🇭சுவிஸ் 🇨🇦கனடா வாழ் உறவுகளின் செயல் | வியந்து பார்க்கும் வெள்ளைக்காரர்..

புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடலில் பயன்தரு நிழல் மரங்களை நாட்டி அழகுபடுத்திய *தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும* மயூரன்.. (முழுமையான படங்கள், வீடியோ)

புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடலில் பயன்தரு நிழல் மரங்களை நாட்டி அழகுபடுத்திய *தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும* மயூரன்.. (முழுமையான படங்கள், வீடியோ)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட பெருக்குமர சுற்றாடலை அழகுபடுத்திய *தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும* மயூரன்.. (முழுமையான படங்கள், வீடியோ)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட பெருக்குமர சுற்றாடலை அழகுபடுத்திய *தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும* மயூரன்.. (முழுமையான படங்கள், வீடியோ)

மீண்டும் புதுப் பொலிவுடன், மக்களினால் வரவேற்கப்படும் புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரம்” (படங்கள், வீடியோ)

மீண்டும் புதுப் பொலிவுடன், மக்களினால் வரவேற்கப்படும் புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரம்” (படங்கள், வீடியோ)

புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரத்துக்கு” மேலும் அழகு சேர்த்த, சுவிஸ் பிறேமிதா.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரத்துக்கு” மேலும் அழகு சேர்த்த, சுவிஸ் பிறேமிதா.. (படங்கள், வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.