;
Athirady Tamil News

கைப்பேசியில் பயங்கரவாதி ஸாரானின் புகைப்படம்..! வேனில் சென்ற 9 பேரிடம் விசாரணை!!

0

மட்டக்களப்பு கொழும்பு வீதியான ரிதிதென்ன பொலிஸ் சோதனைச் சாவடியில் அக்குரனையில் இருந்து காத்தான்குடி நோக்கி பிரயாணித்த வாகனம் ஒன்றை இன்று (12) நிறுத்தி இராணுவத்தினர் சோதனையிட்ட போது கையடக்க தொலைபேசியில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதியான ஸாரான் காசீம் படங்கள் உள்ளிட்டவையை வைத்திருந்ததையடுத்து அந்த வாகனத்தில் பிரயாணித்த 9 பேரையும் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள ரிதிதென்னை சந்தியில் பொலிசார் வீதிச் சோதனை சாவடி அமைத்து இதில் இராணுவத்தினரும் பொலிசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அக்குரனையில் இருந்து வேன் ஒன்றில் 9 பேர் காத்தான்குடி நோக்கி சம்பவதினமான இன்று காலை 11 மணியளவில் பிரயாணித்த போது குறித்த வீதிச்சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இராணுவத்தினர் கொரோனா தடுப்பூசி ஏற்றியுள்ளதா என அதற்கான அட்டையை கேட்டு சோதனையிட்டனர்.

இதன் போது அதில் பிரயாணித்த முகமட்பாரூக் முகமட் ஆசாத் என்பவர் தனது கையடக்க தொலைபேசியில் தடுப்பூசி ஏற்றியதற்கான அட்டையின் படத்தை காட்ட முற்பட்டார். இதன்போது கையடக்க தொலைபேசியில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதியான ஸாரான் காசீம் படங்கள் உள்ளிட்டவையை வைத்திருந்ததை கண்டுள்ள இராணுவத்தினர் அவருடன் பிரயாணித்த 9 பேரையும் தடுத்தி நிறுத்தினர்.

இதனையடுத்து அவர்களை விசாரணையின் பின்னர் விடுதலை செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.