;
Athirady Tamil News

வவுனியாவில் உமாமகேஸ்வரனின் ஜனனதினத்தை முன்னிட்டு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

0

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபரும், செயலதிபருமான அமரர் தோழர் முகுந்தன் (கதிர்காமர் உமாமகேஸ்வரன்) அவர்களின் 77ஆவது ஜனனதின நிகழ்வை முன்னிட்டு இன்று (18) வவுனியாவில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா திருநாவற்குளம் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் தெரிவு செய்யப்ட்ட 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு கழகத்தின் பிரான்ஸ் கிளைத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் அனுசரணையில்
அகவணக்கம் மற்றும் நினைவுப் பகிர்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் கழகத்தின் மத்திய குழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான ஆசிரியர் சு.காண்டீபன் , ஆச்சிபுரம் கிராம மகளிர் செயற்பாட்டாளர் சிரோமி, கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்..

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.