;
Athirady Tamil News

பிரதமரின் தலைமையில் திறந்துவைக்கப்பட்ட ஓவிய கண்காட்சி!!

0

ஜப்பான் – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிரேஷ்ட ஓவியரும் சிற்பியுமான கலாநிதி எச்.ஏ.கருணாரத்னவின் ZEN – THE ESSENCE OF JAPANESE BEAUTY ஓவிய கண்காட்சி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (07) பிற்பகல் திம்பிரிகஸ்யாய கெலரி ஃபோலைஃப் (Gallery FourLife) எனும் இடத்தில் திறந்துவைக்கப்பட்டது.

இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஓவியக் கண்காட்சி இன்று (08) முதல் மார்ச் 14ஆம் திகதி வரை முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 05 மணிவரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவைக்கப்படும்.

தொன்னூற்று மூன்று வயதுடைய சிரேஷ்ட ஓவியரும் சிற்பியுமான கலாநிதி எச்.ஏ.கருணாரத்ன ஜப்பான் அரசாங்கத்தின் உயரிய விருதான “The Order of the Rising Sun, Gold and Silver Rays” விருதினை பெற்றவராவார்.

ஓவியக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து கலாநிதி எச்.ஏ.கருணாரத்ன அவர்களின் வரையப்பட்ட ஓவியம் உள்ளிட்ட நினைவு பரிசொன்று கலாநிதி எச்.ஏ.கருணாரத்னவினால் பிரதமருக்கு வழங்கிவைக்கப்பட்டது. ஓவியக் கண்காட்சியின் பொறுப்பாளராக சதுரங்க பியகம பணியாற்றுகின்றார்.

ஓவியக் கண்காட்சி திறப்பு விழாவில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மியுகொஷி ஹிதெகி (MIZUKOSHI Hideaki), கலாநிதி எச்.ஏ.கருணாரத்ன அவர்களின் குடும்ப உறுப்பினரகள் மற்றும் கெலரி ஃபோலைஃப் முகாமைத்துவ பணிப்பாளர் சதுரங்க பியகம உள்ளிட்ட இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.