;
Athirady Tamil News

ஏப்ரல் 1-ந்தேதி முதல் திருப்பதியில் ஆர்ஜித சேவைகளில் பக்தர்கள் அனுமதி…!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி கட்டண சேவைகளான ஆர்ஜித சேவைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கொரோனா குறைந்ததை அடுத்து ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்று வந்த ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுப்ரபாதம், அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை, திருப்பாவாடை, மேல் சாட் வஸ்திரம், அபிஷேகம், கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகியவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

இந்த கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை ஆர்ஜித பிரம்மோற்சவம் சகஸ்கர தீப அலங்கார உள்ளிட்ட சேவைகளை நேரடியாகவும், இணையதளம் மூலம் கலந்து கொள்ளும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

அவர்களுக்கு பிரசாதம் வழங்குவதிலும் பழைய முறையே பின்பற்றப்படும். மேலும் ஆர்ஜித சேவைகள், உதயாஸ்தமன சேவை, விம்சதி வர்‌ஷ தர்ஷினி சேவை டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் கொரோனா நிபந்தனைகளுடன் தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று 58,561 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,401 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.01 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.