மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இன்று பதவியேற்பு !!

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று பதவியேற்கவுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக நந்தலால் வீரசிங்க, அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நந்தலால் வீரசிங்க நியமிக்கப்படவுள்ளார்.