;
Athirady Tamil News

எதிர்க் கட்சித்தலைவரை சந்தித்தார் மாலைதீவு சபாநாயகர் !!

0

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட், எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவை நேற்று (21) எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பின்போது, நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலைவரம் தொடர்பில் பேசப்பட்டதுடன், இலங்கையின் முன்நோக்கிய பயணத்திற்கு மாலைதீவினால் வழங்கப்படும் நட்பு ரீதியான ஆதரவிற்கு எதிர்க்கட்சித்தலைவர் அவரது நன்றி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.