வவுனியாவில் 63,235 ஏக்கரில் பெரும் போக நெற் செய்கை!
வவுனியா மாவட்டத்தில் பெரும் போக நெற் செய்கை 63,235 ஏக்கரில் இடம்பெற்று வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார்.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 09 கமநல சேவை நிலையங்களின் கீழ் 63,235 ஏக்கரில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விவசாயிகளின் நெற்செய்கை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்குத் தேவையான உரங்கள், விதைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை தடையின்றி வழங்கும் நோக்கிலும், வவுனியா மாவட்டத்தில் உள்ள 09 கமநல சேவை நிலையங்களும் முழுவீச்சில் செயற்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் விரைவாக வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உதவி ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
கடந்த கால காலநிலை மாற்றங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில், இம்முறை பெரும்போகத்தில் சிறந்த விளைச்சலைப் பெற்று மாவட்டத்தின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் விவசாயிகள் தற்போது நிலத்தைப் பண்படுத்தும் பணிகளிலும் விதைப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.