;
Athirady Tamil News

காங்கேசன்துறை மற்றும் பண்டத்தரிப்பில் புதிய தபால் நிலையங்கள்: அடிக்கல் நாட்டி வைத்த அமைச்சர் நளிந்த

0
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை , காங்கேசன்துறை மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளில் புதிய தபால் நிலையங்களை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். 
உள்நாட்டு யுத்தம் காரணமாக வலி. வடக்கு மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த நிலையில், காங்கேசன்துறை தபால் நிலையம் செயற்பாடுகளும் பிறிதொரு இடத்தில் நடைபெற்று வந்தது.
பின்னர் காங்கேசன்துறை பகுதிகள் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் , காங்கேசன்துறை தபால் நிலையமும் காங்கேசன்துறை பகுதியில் தனியார் கட்டடம் ஒன்றில் தற்காலிகமாக இயங்கி வந்தது.
இந்நிலையில் , காங்கேசன்துறை உப தபாலகம் அமைந்திருந்த பகுதியில் மீண்டும் புதிய தபால் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வே இன்றைய தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்   நளிந்த ஜயதிஸ்ஸ,  கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற உறுப்பினர் ச.  ஸ்ரீ பவானந்தராஜா , வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடிக்கற்களை நாட்டி வைத்தனர்.
32.09 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த தபால் நிலையம் , எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது
அதேவேளை பண்டத்தரிப்பு பகுதியிலும் 36.09 மில்லியன் ரூபாய் செலவில் புதிய தபால் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாட்டி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.